பதினைந்து லட்சம் போடலனாலும் பரவால்ல, தீபாவளி செலவுக்கு ஒரு பதினைந்து ஆயிரமாவது போட்டு விடுங்க மோடிஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

வரும் புதன் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் மக்கள் செலவுக்கு பணமின்றி தவித்து வருவதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி செலவுக்காக பிரதமர் மோடி குறைந்தது 15 ஆயிரம் ரூபாயாவது வங்கிக் கணக்கில் போட்டு விட வேண்டும் என்றும், போன தீபாவளிக்கு வாங்கிய கடனையே அடைக்கவில்லை என்றும் கலாய் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..

குளோப்ஜாமூன்காரன் விளம்பரம்

டிவில ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீனு குளோப்ஜாமூன்காரன் விளம்பரம் போட ஆரம்பிச்சிட்டான். தீபாவளி நெருங்குது ரைட்டு.. என்கிறார் இந்த நெட்டிசன்

தீபாவளி செலவுக்கு போட்டுவிடுங்க

பதினைந்து லட்சம் போடலனாலும் பரவால்ல, தீபாவளி செலவுக்கு ஒரு பதினைந்து ஆயிரமாவது போட்டு விடுங்க மோடிஜி.. என கேட்கிறார் இந்த வலைஞர்

அடேய் கடன்டா கடன்

"போன வருஷ தீபாவளிக்கு வாங்கியதே இன்னமும் மீதி இருக்கு .. அதுக்குள்ள அடுத்த தீபாவளி வந்துடுச்சு என்னது பட்டாசா...? அடேய் கடன்டா கடன்...!!! என கலாய்க்கிறது இந்த டிவிட்

சூரியவம்சம் சின்ராசு மாதிரி தான்

தீபாவளி, பொங்கல் வந்தாலே பெண்கள கைல புடிக்க முடியாது..சூரியவம்சம் சின்ராசு மாதிரி தான்... என்கிறார் இந்த நெட்டிசன்

புது வரவு வந்து தூங்க போகிறது

தீபாவளி வந்தாச்சு பெண்கள் அலமாரியில் புது வரவு வந்து தூங்க போகிறது #சேலைகள்.. என கூறுகிறது இந்த டிவிட்

கல்யாணம் ஆனவங்க கவலை

பொங்கல்,தீபாவளி நாள் வந்தா கல்யாணம் ஆகாத ஆம்பள சந்தோஷப் படுகிறான். அதுவே அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தால் ரொம்ப ரொம்ப வருத்த படுகிறான்... என்கிறார் இந்த நெட்டிசன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens started to make fun of Diwali on social media. They are delivering fun comments on Diwali.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற