இட்லி சாப்பிட்டாங்களானு கேட்டதுக்காக யாருமே இட்லி சாப்பிட முடியாம பண்ணிட்டீங்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரேஷன் கடைகளில் இனி உளுத்தம்பருப்பு விநியோகிக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு டுவிட்டரில் பல கருத்துகள் பறக்கின்றன. அவற்றின் சில சுவாரஸ்யமான டுவீட்கள் இதோ உங்களுக்காக.

ரேஷன் கடைகளில் இனி துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளுந்தம் பருப்பு கொள்முதலை நிறுத்தி விட்டதாக தமிழக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் ஏழை மக்களை மிகவும் பாதித்துள்ளது. மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக டுவிட்டரில் இது தொடர்பான கருத்துகள் உலா வருகின்றன. இந்த நெட்டிசன் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

பீரு தான் முக்கியம்

இனி நியாயவிலை கடைகளில் உளுந்தம்பருப்பு வழங்கப்படாது என்று தமிழக அரசு சொல்கிறது. எதுவும் போடாதீங்க கொஞ்சம் கொஞ்சமா குறைத்து ரேஷன் கடையை மூடிவிட்டு டாஸ்மாக் கடையை திறந்துடுங்க. சோறு முக்கியமில்ல, பீரு தான் முக்கியம் என்று கொதித்துள்ளார் இவர்.

இட்லி விலைய ஏத்திடுவாங்களே

ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது மக்களே... அரசு அறிவிப்பு. அட கடவுளே இனி எங்க ஊரு இட்லி கடையில எல்லாம் இட்லி விலையை உயர்த்திடுவாங்களே என்று கவலைப்படுகிறார் இந்த வலைபதிவர்.

பரவாயில்லையே

ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு கிடைக்காதுன்னு அரசு அறிவிச்சிட்டாங்க. பரவால நாங்க வாய்லயே வட சுட்டுக்குறோம் என்று நக்கலடிக்கிறார் இவர்.

கடைசி தலைமுறையா?

சர்க்கரை விலை ஏறிடுச்சி, உளுத்தம் பருப்பு கிடையாது. ரேஷன் கடையை பார்க்கும் கடைசி தலைமுறையும் நாமாகத்தான் இருக்குமோ,,,??? என்று கேட்டுள்ளார் இவர்.

யாருக்குமே இட்சி கிடையாதா?

அப்பலோ ஹாஸ்பிடல்ல அம்மா இட்லி சாப்பிட்டாங்களானு தானே கேட்டோம். அதுக்காக இனி யாருமே இட்சி திங்கக் கூடாதுன்னு அரசு முடிவு செஞ்சுடுச்சு போல என்று கலாய்த்துள்ளார் இந்த வலைபதிவர்.

ரேஷனே இருக்காது போவியா?

என்னது ரேஷன் கடையில உளுத்தம் பருப்பு கிடையாதா. ஷாக்காதீங்க இன்னும் கொஞ்ச நாள்ள ரேஷன் கடையே இருக்காது போவியா என்று சளித்துக் கொள்கிறார் இவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens trolling the announcement of Tn government that there is no Urid dhal supply at Ration shops. Here are some interesting tweets.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற