
சென்னை, கடலூர், புதுவை.. 3 பேரும் இங்க வாங்க.. நவம்பரும், டிசம்பரும் மன்னிப்பு கேட்கணுமாம்!
சென்னை: நவம்பர், டிசம்பர் மாதங்கள் என்றாலே சென்னை, கடலூர் உள்ளிட்ட சில ஊர் மக்களுக்கு வெள்ளம் பயம் தானாக வந்து விடும்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டாலே தமிழகத்தைப் பொறுத்தவரை மற்ற மாவட்டங்களைவிட சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு மழை, வெள்ளம், புயல் என கவலைப்பட ஆயிரத்தெட்டு காரணங்கள் உண்டாகி விடும். போதாக்குறைக்கு வானிலை மைய அறிவிப்புகள் மேலும் வயிற்றில் புளியைக் கரைக்க வைத்து விடும்.

ஒவ்வொரு ஆண்டும் விடாமல் நாலைந்து நாட்களுக்கு சூரியன், நிலாவையே பார்க்க முடியாது. துவைத்த துணிகளை என்னதான் ஃபேன் போட்டு காய வைத்தாலும், நன்றாக காயாது. இதில் வேறு வழியே இல்லாமல் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் வெளியில் செல்பவர்களின் பரிதாபக் கதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இப்படியாக மழைக்கால மக்களின் சொந்தக்கதை, சோகக்கதைகளையெல்லாம் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் சில...