For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடுத்து வாசிங்க.. மனசு உற்சாகமாக ஃபீல் பண்ணும் பாருங்க!

Google Oneindia Tamil News

உடம்புக்கு எக்சர்ஸைஸ் நிறைய இருக்கு. மனசுக்கு என்ன இருக்கு.. நிறையப் பேருக்கு இதில் சந்தேகம் வரும்.

மனசுக்கு மிகப் பொருத்தமான சரியான பயிற்சி எது தெரியுமா.. வாசிப்புதான்.. நல்ல எழுத்துக்களை வாசிச்சுப் பாருங்க.. எப்படி உற்சாகமாக மாறிப் போவீங்கன்னு நீங்களே உணர்ந்து பாருங்க.

8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

நல்ல வாசிப்பும், நல்ல எழுத்தை வாசிப்பதும் நமது மனசுக்கு அப்படி ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

தெளிவான மனது

தெளிவான மனது

புத்தகங்களை வாசிக்கும் போது மனதில தெளிவு பிறக்கும். தீர்வு கிடைக்காத பிரச்சினைகளுக்குக் கூட தீர்வு தரும் புத்தகம். நல்வழிக் கதைகளைப் படிக்கும் போது பிறரின் மீதிருந்த கோபமும் வஞ்சமும் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் நம் வாழ்வை செம்மையாக்குகின்றன.

மனது பக்குவமாகும்

மனது பக்குவமாகும்

நம் மனதைப் பக்குவப்படுத்துகிறது புத்தகங்கள். புது முயற்சிக்கு வித்திடுவது புத்தகங்கள். புத்தகங்கள் வாசிப்பதால் நாம் பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். புத்தகங்களை வாசிக்கும் மனிதனிடம் நற்பண்புகள் அதிகம் இருக்கும். புத்தகங்கள் அதிகம் வாசிப்பதால் நம்முடைய அறிவு விரிவடைகிறது.

வாழ்க்கைப் பாதை மாறும்

வாழ்க்கைப் பாதை மாறும்

புத்தகங்களால் ஒருவருடைய வாழ்க்கைப் பாதையை கூட மாற்றியமைக்க முடியும். புத்தகங்கள் நம் சிந்தனையைத் தூண்டுகிறது. நம்மை மென்மேலும் உயர்த்திக் கொள்ள உதவுகிறது. நம்முடைய சிந்தனைத் திறனை வளர்க்கிறது. தன்னம்பிக்கையை ஊட்டுகிறது புத்தகங்கள் நமக்கு.

கொஞ்சமாவது படியுங்கள்

கொஞ்சமாவது படியுங்கள்

ஒரு நாளைக்கு குறைந்தது பத்து நிமிடங்களாவது புத்தகங்களைப் படியங்கள்.உங்கள் மனதுக்குப் பிடித்த புத்தகங்களைப் படியுங்கள். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் புத்தகங்கள் எண்ணற்றவை. புத்தகங்களை வாசிங்க. புத்துணர்ச்சியோடு இருங்க.

English summary
Book reading is a very good habit we should follow regularly. IT moulds up our mind and giving the hope to redesign our minds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X