தமிழகத்தில் இன்று
கோவை:
திருப்பூரில் சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி தொடங்கியது.
எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தரத்திலும், சேவையிலும் உலக நாடுகளுடன் போட்டியிட வேண்டியசூழ்நிலையில் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் உள்ளனர் என கண்காட்சியில் கலந்து கொண்ட ஆயத்த ஆடைஏற்றமதி கவுன்சில் சேர்மன் ராஜூ கோயங்கோ கூறினார்.
திருப்பூரில் செவ்வாய்க்கிழமை சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி துவங்கியது. இந்தக் கண்காட்சி துவக்கவிழாவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோயங்கோ பேசியதாவது:
உலகமயமாக்கலின் போது பல வெளிநாட்டு நிறுவனங்களின் ஆயத்த ஆடைகள் இந்தியாவிற்குள் நுழையும்போது ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கடும்போட்டியை சந்திக்க நேரிடும். மேலும் தொழில்நுட்ப மேம்பாடு,ஆன் லைன் டெலிவரி, ஆடைகளின் தர மேம்பாடு ஆகியவற்றிலும் போட்டிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளை சமாளிக்கவும், வெற்றி பெறவும் தரத்தையும், சேவையையும் மேம்படுத்த வேண்டியதுமிகவும் அவசியம். இதற்கு அரசு எப்போதும் ஆதரவளித்து வருகிறது என்று அவர் பேசினார்.
விழாவில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், செயலர் பொன்னுசாமி, மாவட்ட கலெக்டர்சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கோயங்கா, ஆயத்த ஆடை ஆராய்ச்சிக்காகவும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் ஒரு கோடிரூபாய் செலவிடப்படும். அடுத்த 2005 ம் ஆண்டிற்குள் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி இலக்கான ரூ 9 பில்லியன்டாலர் அளவை எட்டி விடுவோம். இதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அரசு விரைவில் தீர்க்கும் எனஎதிர்பார்க்கிறோம். ஜவுளி மேம்பாட்டு நிதியில் வழங்கப்படும் மானியத்தை அரசு உயர்த்த வேண்டும் என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!