For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஒன்றும் செய்ய முடியாது; இப்படித்தான் இருக்கும்; அதனால் என்ன பரவாயில்லை - இது நமது நாட்டின் தாரகமந்திரமாகி விட்டது என்பதற்கு, சமீபத்திய அத்தாட்சி கிரிக்கெட் சூதாட்டம்.

முதலில் செய்தி வெளியாகிய போது, நமக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இப்பொழுது -சுவாரஸ்யமாக மாறி விட்டது. இன்னும் யார் யார் பெயர் அடிபடப் போகிறதுஎன்பதைப் பற்றி ஒரு பெட்டிங் நடந்தால், நல்ல வசூல் இருக்கும். அந்த அளவுக்குசுவாரஸ்யம்.

கபில்தேவின் அழுகை என்ன? மனோஜ் பிரபாகரின் வீடியோ சாகசம் என்ன? அசரவைக்கிற அஸாருதீனின் சொத்து கணக்கு பற்றிய வதந்தி என்ன?, ஜடேஜா,மோங்கியா, அஜய் சர்மா என்று சூதாட்டக்கார ஆட்டக்காரர்கள் என்ற முத்திரைபெறுகிறவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போவது என்ன. ...சொல்லப்போனால்,ஒரு நாள் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தையும், மிஞ்சுகிற சுவாரஸ்யம் இந்த சூதாட்டவிவகாரத்தில் வந்து விட்டது.

ஆனால், உண்மைகள் நிரூபிக்கப்படும் என்றோ, குற்றவாளிகள் ஏதாவதுதண்டனைக்குள்ளாவார்கள் என்றோ, சூதாட்டம் இனி நடக்காது என்றோ, நாம் யாரும்நம்பவில்லை. ஒன்றும் செய்ய முடியாது; இப்படித்தான் இருக்கும்; அதனால்பரவாயில்லை - கிரிக்கெட் ஆட்டத்தைத் தொடர்ந்து பார்க்கத்தான் செய்வோம்.

அரசியல்வாதிகள் ஊழல் செய்தாலும், அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும்,ஊழியர்கள் பணம் பிடுங்கினாலும் நமது அணுகுமுறை இதேதான். யாராவது மாட்டிக்கொண்டால், அதுபற்றிய விவகாரங்களை நாம் அறிந்து கொள்ள அல்ல; ஊழல்ஒழியவேண்டும் என்ற ஆதங்கத்தினால் அல்ல ; வழககு, விசாரணை, வாய்தா, பொய்,புனைசுருட்டு எல்லாம் நமக்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன - அவ்வளவுதான்.ஊழலைப் பொறுத்த வரையில், இது இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்துக்கொண்டு விட்டோம்.

இந்த அணுகுமுறை இதோடு நிற்பதில்லை. கடைகளில் கலப்படம் நடந்தால் - இதுஇப்படித்தான் இருக்கும், வேறு வழி இல்லை; வக்கீல்கள் வாய்தா வாங்கியே வழக்கைநீட்டித்துக் கொண்டு போனால் - இது இப்படித்தான் இருக்கும், வேறு வழியில்லை.ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணம் பிடுங்கினாலும் சரி, ஆட்டோ ரிக்ஷாக்காரர்கள்மீட்டருக்கு மேல் பணம் கேட்டாலும் சரி, நமது அணுகுமுறை இதேதான்.

அதாவது நமது வாழ்க்கையில் மோசடியும், ஊழலும் தவிர்க்க முடியாதவை என்றமுடிவுக்கு நாம் வந்துவிட்டோம். அந்த அரசியல்வாதி ஆயிரம் கோடி சம்பாதித்துவிட்டாராமே ... இந்த ஜட்ஜின் கை

நீளமாமே ... இந்தக் கிரிக்கெட் ஆட்ட்க்காரருக்கு இவ்வளவு சொத்து இருக்கிறதாமே ...என்றெல்லாம் நாம் பேசும்போது, இப்படி நடக்கலாமா என்ற கோபத்தை விட, நமதுமனதில் ஓங்கி நிற்பது இவ்வளவு பணத்தை அவர்கள் எங்கே வைக்கிறார்கள்? என்றஆர்வம் கலந்த சந்தேகம்தான்.

ஊழல் செய்தவர்கள் மீது நமக்கு கோபம் இல்லை; பணம் பாதாளம் வரை பாயும் என்றுபுரிந்துகொண்டு, பணம் வைத்திருப்பவரை நமது சமூகம் பெரிய மனிதராகக்கருதுகிறது. அந்தப் பணம் ஊழலில் கிடைத்தாலும்

சரி - கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் கிடைத்தாலும் சரி - பணத்திற்கு சென்றஇடமெல்லாம் சிறப்பு என்பது அந்தக் காலம். பணம் பெற்றவனுக்குபார்ததவர்களிடமெல்லாம் மரியாதை என்பதுதான் இந்தக் காலம்.

சமூகமே இப்படி இருப்பதால்தான், ஊழலும் மோசடியும் பெருகுகின்றன. ஒன்றும்செய்ய முடியாது; இதெல்லாம் இப்படித்தான் இருக்கும்; அதனால் என்னபரவாயில்லை!

அஸாருதீன்

கபில் தேவ்

மனோஜ் பிரபாகர்

ஜடேஜா...

இந்த கட்டுரை குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X