For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த வாரம்

By Staff
Google Oneindia Tamil News

நாஞ்சில் மனோகரன் உடல் தகனம்

சென்னை:

மாரடைப்பால் காலமான தமிழக வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில்கி.மனோகரனின் உடல் புதன்கிழமை காலை தகனம் செய்யப்பட்டது.

ஓட்டேரி சுடுகாட்டில் மனோகரனின் உடலுக்கு அவரது மூத்த மகன் கிருஷ்ணா தீமூட்டினார். முதல்வர் கருணாநிதி உள்பட பலர் கண்ணீர் மல்க மனோகரனின் உடலுக்குஇறுதிஅஞ்சலி செலுத்தினர்.

வெளியூர் பயணம் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நாஞ்சில் மனோகரனுக்குத் திடீர்நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,செவ்வாய்க்கிழமை காலை இறந்தார்.

சென்னை, புரசைவாக்கம் முடக்காத்தாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள்அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. புதன்கிழமை காலை வரை மக்கள் வரிசையில்நின்று அஞ்சலி செலுத்தினர்.

புதன்கிழமை காலை 9.45-க்கு முதல்வர் கருணாநிதி வந்து மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி,துரைமுருகன் உள்பட பிற அமைச்சர்களும், மேயர் மு.க.ஸ்டாலின், மத்தியஅமைச்சர்கள் டி.ஆர். பாலு, செஞ்சி ராமச்சந்திரன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றஉறுப்பினர்கள், பிற கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மறைந்த அமைச்சரின்உடலுக்கு இறுதி அஞ்சலிசெலுத்தினர்.

பிறகு 9.50-க்கு இறுதி யாத்திரை புறப்பட்டது. மலர்களால் தேர் போல்அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனத்தில் அமைச்சரின் உடல் ஏற்றப்பட்டது. உடல்வைக்கப்பட்டிருந்த வாகனம் முன்னே செல்ல முதல்வர் உள்பட மற்றவர்களும் பின்தொடர்ந்து நடந்து ஊர்வலமாகச் சென்றனர்.

சிறிது தூரம் நடந்து வந்த முதல்வர் பின்னர் தனது காரில் ஏறிப் பின் தொடர்ந்தார்.இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கரியப்பா தெரு, தானா தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக ஊர்வலம்சென்று இறுதியாக 10.45-க்கு ஓட்டேரி மயானத்தை அடைந்தது. வாகனத்திலிருந்துஇறக்கப்பட்டு தகனம் நடைபெற இருந்த இடத்துக்கு அமைச்சரின் உடல் கொண்டுவரப்பட்டது.

அங்கு முதல்வர் கருணாநிதி உள்பட சில தலைவர்கள் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர். அப்போது கருணாநிதியின் கண்கள் கலங்கின. பின்னர் அருகேஅமைக்கப்பட்டிருந்த பந்தலுக்குச் சென்று நின்று கொண்டார். மற்றவர்களும்பந்தலில்இருந்து இறுதிச் சடங்கைப் பார்வையிட்டனர்.

11 மணிக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், அமைச்சருக்கு உரியஅரசுச் சடங்காக வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டது.பின்னர் 11.05-க்கு அமைச்சரின் மூத்த மகன் கிருஷ்ணா, தந்தையின் சிதைக்குத் தீமூட்டினார். அப்போது மயானத்தில் இருந்த அனைவரும் மவுனமாக இருந்து மறைந்ததலைவருக்கு இறுதி மரியாதையும், அஞ்சலியும் செலுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X