நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட இடத்தில் போலீஸ்காரர் தற்கொலை
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட காஜனூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாளவாடி பகுதிக்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டபோலீஸ்காரர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் பெயர் ரவிகுமார் (27), மத்தியப் புறக்காவல் படை பிரிவில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தார். ராஜ்குமார் சந்தனக்கடத்தல் வீரப்பனால்கடத்தப்பட்டதையடுத்து தளவாடி பகுதிக்கு சிறப்பு பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
பெங்களூரில் ஆங்காங்கே வன்முறை தொடர்கிறது:
ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டதையடுத்து, பெங்களூரில் சட்டம்- ஒழுங்கு நிலையைப் பாதுகாக்க போலீஸார் கடும் முயற்சி எடுத்து வருவதாகஇணை போலீஸ் கமிஷனர் அஜய் குமார் சிங் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவர் கூறுகையில்,
வியாழக்கிழமையுடன் ராஜ்குமார் கடத்தப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இக்கடத்தல் சம்பவத்தால் பெங்களூர் நகரில் பல்வேறு அசம்பாவிதச்சம்பவங்கள் நடந்தன.
இதுவரை 60 அரசுப்பேருந்துகள் வன்முறைக் கும்பலால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அக்கும்பல் தாக்கியதில் துணை போலீஸ் கமிஷனர் கோபால்ஹோசூர் மற்றும் 29 போலீசார் காயமடைந்தனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தினால் பெங்களூர் நகரில் ஒரு வாரத்திற்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. ராஜாஜிநகர், மாகடி ரோடு பகுதிகளில் பதட்டம் நிறைந்துகாணப்படுகிறது.
இதுவரை 28 பிளாட்டூன் மத்திய புறக்காவல் படைப் போலீசார், 30 பிளாட்டூன் நகர ஆயுதப்படைப் போலீசார் மற்றும் 10, 000 போலீசார் நகர்முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பலர் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாக வதந்தி பரப்பி வருகின்றனர். வதந்திகள் எதுவும் உண்மையல்ல. இனிமேல் பொதுமக்களின்உயிருக்கோ, உடமைகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு போலீஸ் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நகரில் வழக்கம் போல் புதன்கிழமை காலை முதல் பேருந்துகள் ஓடத்தொடங்கின என்றார் அஜய் குமார் சிங்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!