For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கென்யாவில் நாக்-அவுட் ஒரு தின கிரிக்கெட் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

இரண்டாவது ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டித் தொடர் கென்ய தலைநகர்நைரோபியில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும்கென்யாவும் மோதுகின்றன.

இங்கிலாந்தில் கடைசியாக நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில்அரையிறுதிக்குத் தகுதி பெற்ற 4 அணிகளும் நேரடியாக இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள்நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுகின்றன. நியுசிலாந்துக்கும் நேரடிஇரண்டாவது சுற்று வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்கு முன்பு இருஆட்டங்களில் விளையாடவேண்டும்.

அக்டோபர் 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இப் போட்டி நடைபெறும். 3-ம் தேதிநடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் கென்யாவும் மோதுகின்றன.

ஆட்ட விவரம்:

அக்டோபர் 3: இந்தியா - கென்யா (முதல் ஆட்டம்)

அக்டோபர் 4: இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் (2-வது ஆட்டம்)

அக்டோபர் 5: இங்கிலாந்து - பங்களாதேஷ் (3-வது ஆட்டம்)

அக்டோபர் 7: ஆஸ்திரேலியா - முதல் ஆட்டத்தில் வென்ற அணி

அக்டோபர் 8: பாகிஸ்தான் - 2-வது ஆட்டத்தில் வென்ற அணி

அக்டோபர் 9: நியுசிலாந்து - ஜிம்பாப்வே

அக்டோபர் 10: தென் ஆப்பிரிக்கா - 3-வது ஆட்டத்தில் வென்ற அணி

அக்டோபர் 11: முதல் அரையிறுதி ஆட்டம்

அக்டோபர் 13: இரண்டாவது அரையிறுதி ஆட்டம்

அக்டோபர் 15: இறுதி ஆட்டம்

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X