For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசைத்தறி ஏற்றுமதி உயர்ந்துள்ளது

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

விசைத்தறி துணிகளின் ஏற்றுமதி 24.5 சதவீதம் உயர்ந்துள்ளது என விசைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்தெரிவித்துள்ளது.

இது குறித்து விசைத்தறி ஏற்றுமதியாளர்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மதிவாணன் வளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:

விசைத்தறி ஏற்றுமதி கடந்த காலாண்டு இறுதியில் (ஏப்ரல் 2000-ஜூன் 2000) ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்தஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 24.5 சதவீதம், டாலர் மதிப்பில் 21. 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதே காலக் கட்டத்தில் ஏற்றுமதி ஒரு லட்சத்து 744 கோடி ரூபாயாக இருந்தது. இதுதற்போதைய கால் இறுதியாண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 84 0கோடியாக உயர்ந்துள்ளது.

விசைத்தறிகளை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும், வர்த்தகத்தை பெருக்கவும் பல்வேறு நாடுகளுக்குவிசைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் செல்கின்றனர்.

பங்களாதேஷ், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கு உறுப்பினர்கள்செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள விசைத்தறிகளை மேம்படுத்த சோமனூரில் ஒரு விசைத்தறி மேம்பாட்டு மையம்திறக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஜவுளி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் சிக்கல்கள்ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக நிதிக்கு உரிய ஜாமீன் பத்திரங்கள் வழங்குதல், பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை இறக்குமதி செய்தல்போன்றவற்றில் உள்ள விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும்.

மேலும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, நிவீனமயமாக்குவதில் ஏற்படும் இடையூறுஆகியவை ஏற்றுமதியைப் பாதிக்கும் காரணங்களாக விளங்குகின்றன. இவற்றைத் தவிர்க்க அரசு தக்கநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X