For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் தீவிரவாதிகள் வெப்தளம் கிளப்பிய புயல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழ் தீவிரவாதிகளின் இன்டர் நெட் வெப் தளம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.,க. அ.தி.மு.க.எம்.பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

லோக் சபாவில், வியாக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பின்பு அ..தி.மு.க. எம்.பி. மலைச்சாமி தமிழ் தீவிர வாதிகள்வெப்தளம் குறித்து பிரச்னை எழுப்பினார்.

அவர் பேசுகையில், தமிழர் விடுதலைப் படை எனும் அமைப்பு இன்டர் நெட்டில் புதிய வெப் தளம்தொடங்கியுள்ளது. இதில் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் பல தென்னிந்திய பகுதிகளை இனைத்து அகண்டதமிழகம்உருவாக்கப்போவதாக அந்த வெப் தளத்தில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கும் படியும் அந்த வெப் தளத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.

இதற்கு டி.ஆர். பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுத்ததால் அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

சபாநாயகர் பாலயோகி தலையிட்டு இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரமோத் மகாஜன் பதிலளிக்கவேண்டும் என கூறினார்.

பிரமோத் மகாஜன் கூறுகையில், இது போன்ற பிரிவினைவாத வெப் தளத்தை தடை செய்வதற்கு நடவடிக்கைகள்எடுக்கப்படும். அதற்கான உயர் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

தீவிரவாதிகள் வெப்தளம் சட்டவிரோதமானது என தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வெப் தளம் இந்தியாவிலிருந்து செயல்படுகிறதா? அல்லது வெளிநாட்டிலிருந்து செயல்படுகிறதா எனதெரியவில்லை.அந்த வெப் தளத்தையும் நான் பார்க்கவில்லை.

வெப் தள உரிமையாளர்களோடு ஆட்சியில் இருப்பவர்களை இணைத்து பார்க்கக்கூடாது. கம்ப்யூட்டர்குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பது எளிதானதல்ல.

வெப் தளம் குறித்து முன்னாள் பிரதமர் சந்திரசேகர் சபாநாயகரிடம் சில தஸ்தாவேஜுகளை புதன்கிழமைகொடுத்துள்ளார். அது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்யும் என்றார்.

இதன் பின் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பேசுகையில், மந்திரியின் பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை.சபாநாயகர் தகவல் தொழில்நுட்பத்துறை, உள்துறை மற்றும் புலனாய்வுத்துறையின் கூட்டுக் கூட்டத்தை உடனேகூட்டி எடுக்க வேண்டிய நடவடி,க்கை குறித்து விசாரிக்க வேண்டும்.

நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பான விஷயம் இது. எனவே அலட்சியப்போக்கு கைவிடப்படவேண்டும்.

மத்திய அரசு தேசிய பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ளதாக தெரியவிலலை. நான் கொடுத்ததஸ்தாவேஜுகளை சபாநாயகரிடமிருந்து மத்திய அரசு பெற்று தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வெப்தளத்தை பார்த்து வருவதால் இதை இன்னும் ரகசியம்என கூறி மறைக்க முடியாது என பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X