For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்கெட்டை தாக்கிய பூகம்பம்

By Staff
Google Oneindia Tamil News

டி.ராம்ராஜ்

பெங்களூர்:

குஜராத் பூகம்பத்தை போன்ற ஒரு அதிர்ச்சி கிரிக்கெட் உலகை தாக்கியுள்ளது. அது கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மனின் மறைவே ஆகும.

இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் வந்துள்ள இச்செய்தி அனைவருக்கும் ஒரு "ஷாக்" காகஇருக்கிறது.

பிராட்மன் மறைந்தாலும் அவருடைய சாதனைகள் மறையாமல் அவரை நினைவுகூறும். டெஸ்ட் கிரிக்கெட்டில்அவர் எடுத்த ரன்களை காட்டிலும் அதிக ரன்களை மற்றவர்கள் எடுத்து விட்டனர்.

இருந்தாலும் அவருடைய சாதனையான மூன்று இன்னிங்சுற்கு ஒரு சதமும், டெஸ்ட் கிரிக்கெட் சராசரியான 99.94ரன்கள் என்பதும் இதுவரையில் முறியடிக்கப்படவில்லை. முறியடிக்கப்படுவதற்கான சாத்தியமும் மிகக்குறைவு.

சாதனையாளரான அவர்வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததை பெருமையாக நினைக்கும் நிலையில்,ஆஸ்திரேலியாவிற்காக அவர் கிரிக்கெட் ஆடியபோது, இந்திய அணியின் சார்பில் அவருடன் கிரிக்கெட்விளையாடிய அனுபவம் பெற்றவர்களான குண்டப்பா விஸ்வநாத் எனப்படும் ஜி.ஆர்.விஸ்வநாத், இந்தியஅணியின் சுழல்பந்து இரட்டையர்கள், பி.எஸ்.சந்திரசேகர் மற்றும் ஈ.ஏ.எஸ்.பிரசன்னா ஆகியோரிடம் உரையாடியபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள்:

ஜி.ஆர்.விஸ்வநாத்:

கிரிக்கெட் உலக சாதனையாளரான அவர் 1978ல் அடிலெய்டு மேட்சின் போது இந்தியஅணியின் டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்தார். தன்னம்பிக்கை மிகுந்த அவரை கண்டாலே நமக்கும் அந்த நம்பிக்கை வந்துஒட்டிக்கொள்ளும் அளவிற்கு ஒரு ஈர்ப்புள்ள மனிதர்.

விளையாட்டு உலகில் மறக்க முடியாத அவர் தன் வாழ்க்கையிலும் சதமடிப்பார் என நினைத்திருந்த நிலையில்92வது வயதில் மறைந்துள்ளார். அவரைபோன்ற இன்னொரு மனிதரை காண இயலாது. அவரது மறைவுவிளையாட்டு உலகிற்கே பேரிழப்பாகும்.

ஈ.ஏ.எஸ்.பிரசன்னா:

ஒவ்வொரு முறை ஆஸ்திரேலியா செல்லும் போதும் அவரை சந்திப்பதுண்டு. தன்னிகரற்றமனிதரான அவர், தனது சாதனைகளால் தலைக்கனம் கொள்ளாதவர். அவருடைய ஆட்டத்தை பற்றிசொல்வதென்றால் தற்போதைய ஆட்டத்தை 1930 மற்றும்1940களிலேயே ஆடிவிட்டவர். நல்ல மனிதரான அவர்மறைவு ஒரு பேரிழப்பாகத்தான் உணரப்படுகிறது.

.எஸ்.சந்திரசேகர்:

இருமுறை ஆஸ்திரேலியா சென்ற போது அவரை சந்தித்திருந்தாலும் தனிப்பட்ட முறையில்அவருடன் உரையாடியதோ, பழகியதோ கிடையாது. எனினும், அவர் ஜாலி டைப் நபரான அவர் எதையும்சிறப்பாக செய்யக்கூடியவர். அவருடைய சாதனைகள் மற்றவர் கூறி தெரிய வேண்டிய நிலையில் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X