For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மோசமான நகரங்களில் ஒன்று சென்னை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Merina Beachசிங்காரச் சென்னை என்று ஆளும்கட்சியினரால் வாய் வலிக்க அழைக்கப்படும் சென்னை குறித்து உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு அதிர்ச்சியைத் தருகிறது.

உலகிலேயே மிகவும் போர் அடிக்கும் நகரமாகவும், வாழ்க்கைத் தரம் மிக மோசமாக உள்ள நகரங்களில் ஒன்றாகவும் சென்னை தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு இணையாக மற்றொரு மிக மோசமான நகரமாக டெல்லி தேர்வாகியுள்ளது.

லண்டனில் உள்ள வில்லியம் மெர்சர் என்ற மனித வள மேம்பாட்டுத்துறை மையம் உலகளவில் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விவரம்வெளியாகியுள்ளது. மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியல், பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழல், மருத்துவ வசதிகள், கல்வி, போக்குவரத்து, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்பட 10 அம்சங்களைஅடிப்படையாக வைத்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

உலகம் முழுவதும் 215 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சென்னையும் டெல்லியும் ஜோடியாக 176வது இடத்தைப் பிடித்துள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத் 212வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத் தடைகளால் சிக்கி சின்னாபின்னமானபாக்தாதுக்கு இணையான இடத்தை சென்னை பிடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் 146வது இடத்தைப் பிடித்துள்ளது.

Kabaleeswarar Templeஆய்வறிக்கைப்படி, கனடாவில் உள்ள வான்கூவர், சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா ஆகிய நகரங்கள் மிகச் சிறப்பானநகரஙகளாக தேர்வாகி முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

சென்னை மிகவும் மோசமான, போரடிக்கும் நகரமாக உள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் குறைவு.பொழுது போக்கு அம்சங்களில் சென்னையை விட பாக்தாத் முன்னணியில் உள்ளது.

போக்குவரத்து வசதிகள் இந்திய நகரங்களை விட பாகிஸ்தான் நகரங்களில் மிகவும் நன்றாக உள்ளது. இஸ்லாமாபாத் நகர் கிட்டத்தட்ட நியூயார்க் நகர்போல் மிகச் சிறந்த நகரமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

தெற்காசியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது என்று நடத்தப்பட்ட ஆய்வில்,

கொழும்பு 121 வது இடத்தையும், பீஜிங் 141 வது இடத்தையும், இஸ்லாமாபாத் 146 வது இடத்தையும் பெற்றுள்ளன.

மும்பை 163 வது இடத்திலும், கராச்சி 164 வது இடத்திலும், லாகூர் 166 வது இடத்திலும், பெங்களூர் 175 வது இடத்திலும் வருகின்றன.

Valluvar Kottamசென்னையும், டெல்லியும் மீண்டும் ஜோடி சேர்ந்து 176 வது இடத்தைப் பிடித்துள்ளன.

சிட்னி 7, சான் பிரான்சிஸ்கோ 19, டோக்கியோ 19, பாரிஸ் 35, சிங்கப்பூர் 40, லண்டன் 40, பர்மிங்ஹாம் 59, ரோம் 69, துபாய் 81, கோலாலம்பூர் 87மற்றும் பாங்காக் 113 வது இடத்தில் வருகின்றன.

பொழுது போக்கு அம்சங்களில் சிறந்து விளங்கும் நகரங்கள் வரிசையில் பீஜிங் 144 வது இடத்தையும், பாக்தாத் 204 வது இடத்தையும் பிடித்துள்ளன.

பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாக உள்ள நகரங்கள் வரிசையில் சிட்னி, லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் மற்றும் அபு தாபி ஆகிய நகரங்கள் முன்னணியில்உள்ளன.

போக்குவரத்து வசதிகளைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, டெல்லி 182 வது இடத்தையும், பீஜிங் 129 வது இடத்தையும், பாக்தாத் 153 வதுஇடத்தையும் பெற்றுள்ளன. மெக்ஸிகோ நகர் 212 வது இடத்தில் வருகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X