சின்னப் பையன்கிட்ட தோற்றவர் தானே ஜெயலலிதா’
சென்னை:
அதிமுகவில் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு, உடன் இருப்பவர்களை அடிமைபோல் நடத்துகிறார்ஜெயலலிதா என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ.தாமரைக்கனி கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட தாமரைக்கனி எம்.எல்.ஏ. காலைக்கக்கதிர் பத்திரிக்கைக்கு அளித்த சிறப்புப்பேட்டி:
கே: நீங்கள் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே?
ப: அந்தம்மாவுக்கு என்மேல் பொறாமை. தனி ஆளாக நின்று எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்கிறேன் என்றுஜெயலலிதாவுக்கு என் மேல் பொறாமை. எம்ஜிஆர் இறந்தபோது ஜானகி அம்மாவுடன் சேர்ந்து விட்டேன்.அப்போது ஜெயலலிதாவை மேடையில் கண்டபடி திட்டினேன். அப்போது ஜெயலலிதா என்னை அழைத்துசமாதானமாகப் பேசினார்கள்.
91 ம் ஆண்டு தேர்தலில் எனக்கு சீட் தரவில்லை. அதனால் சவால் விட்டு ராஜீவ்காந்தி அலையில் சிக்காமல் வெற்றிபெற்றேன்.
இந்தம்மா முதல்வரா இருந்தப்போ என்மேல் பல பொய்க்கேஸ்கள் போட்டாங்க. அதெல்லாம் தூசி மாதிரிதட்டிவிட்டு வந்துட்டேன்.
கே: அப்புறம் ஏன் அதிமுகவில் மீண்டும் சரணாகதி அடைந்தீர்கள்?
ப: அவங்க திரும்பவும் கூப்பிட்டாங்க. இந்தம்மா பெரிய முதல்வரு. ஒரு சின்னப் பையன்கிட்ட தோத்துப்போயிட்டாங்க. தாமரைக்கனி இல்லாம அதிமுகவில் ஒண்ணும் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. இந்தம்மா எனக்குகெளரவம் குடுத்திச்சா? இல்லையே.
நேத்து வந்த சுந்தரம் பையனுக்கு சட்டசபை கட்சித் தலைவர் பதவி. அதிமுககாரங்களைத் தப்பா பேசின வீரபாண்டிஆறுமுகத்தை அடிச்சேன். அதுக்கு அவங்க கொடுத்த பரிசுதான் இது.
எட்டுக்கால் பூச்சி பிடிச்சு அதை ஒவ்வொரு காலா பிச்சுப் போடறது போல என்னை கொஞ்சம், கொஞ்சமாகசித்ரவதை பண்ணினாங்க.
ஒன் மேன் ஷோன்னு சொல்வது போல் ஒன் விமன் ஷோ நடக்குது.
கே: ஏதாவது கட்சியில் சேர்ந்து போட்டியிடப்போறேன்னு அறிக்கை வெளியிட்டு இருக்கீங்க. எந்தக் கட்சியில்சேர்ந்து போட்டியிடப் போறீங்க.
ப: திமுகவில் கூப்படறாங்க. பாஜக அல்லது மதிமுகவில் கூப்படறாங்க. இந்த மூணுல ஏதாவது ஒண்ணுல சேந்துபோட்டியிடுவேன்.
கே: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்காக முதல்வர் கருணாநிதி ரூ 30 கோடி கொடுத்தார். அதனால்தான் நீங்கள்,பொதுமக்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறதே?
ப: கருணாநிதி ஒண்ணும் பணம் கொடுக்கல. நான் மூத்த அரசியல்வாதி. எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்து நான் எம்எல்ஏ.அமைச்சர்களை மிரட்டி, அதிகாரிகளைத் திட்டி பணம் வாங்கியிருக்கேன். எல்லாம் சட்டப்படி நடக்கறதால அதைகருணாநிதியால கூட தடுக்க முடியல.
கே: உங்களை அதிமுக விலிருந்து நீக்கியதால், கட்சியை உடைப்பீர்களா?
ப: யாருக்கு வேணும் அதிமுக? அதிமுகவில் எல்லாரும் கொள்ளைக்காரங்க, ஃபிராடு பசங்க. பல வருஷமாஅரசியல்ல இருக்கேன். எனக்கு சொந்த நிலம் கிடையாது. நான் மட்டும் நினைச்சா இன்னிக்கு மந்திரிஆகியிருப்பேன்.
கே: அதிமுகவில் எல்லாரும் கொள்ளைக்கூட்டம்ன்னு சொல்றீங்களே. அப்படீன்னா நீங்க அந்தக் கட்சியில ஏன்இருந்தீர்கள்?
ப: திருடனா பாத்து திருந்துவான்னு நினைச்சேன். ஆனா திருந்தல.
கே: அதிமுகவினரை எப்படி கொள்ளைக்கூட்டம்ன்னு சொல்றீங்க?
ப: எல்லாத்தையும் நான் பக்கத்துல இருந்து பாத்தவன். ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துல 20 ஆயிரம் கோடிரூபாயை மறைச்சு வெச்சிருக்காங்க. அங்க வருமான அதிகாரிகள் போக முடியல. ஆந்திரா கவர்ன்மென்ட்காரங்கபோக முடியலை. மத்திய அரசு போகமுடியல
இந்தத் தேர்தல்ல ஜெயிச்சதும், ஹெலிகாப்டர்ல போய் ஹைதராபாத் தோட்டத்துல குதிச்சு அதைக் கைப்பற்றப்போறேன்.
அங்கே மறைத்து வைத்திருக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாயையும் எடுத்து மக்களுக்குக் கொடுக்கப் போறேன்.
கொள்ளைக்காரி பூலான்தேவியக் கூட மக்கள் மன்னிச்சுட்டாங்க. இவங்கள யாரும் மன்னிக்கமாட்டாங்க.
கே: உங்களை வெளியேற்றியதால் அதிமுகவுக்கு என்ன பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடும்?
ப: என்ன இப்படி சொல்றீங்க? அந்தம்மா என்னவோ சினிமால வர்ற மாதிரி மீண்டும் முதல்வரா வரப்போறா கனவுகாண்றாங்க. என்னைத் தூக்கி எறிஞ்சுட்டு அவங்களால எப்படி முதல்வரா வர முடியும்?
கே: அப்படி உங்களால என்ன செய்ய முடியும்?
ப: நான் சாதாரண ஆளில்ல. பாக்கறதுக்குத்தான் இப்படி இருக்கேன். அந்தம்மாவை ஜெயிக்க விட மாட்டேன்.தென்மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டைன்னு சொல்றாங்க. நான் எம்ஜிஆர் தொண்டன். என் வயத்தெரிச்சலகொட்டிட்டு அவங்களால ஆட்சியப் பிடிக்க முடியாது என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!