For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடையை நீக்கினால் தான் பேசுவோம்: புலிகள் நிபந்தனை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்த முயன்று வரும் நார்வே தூதுக்குழுவின் முயற்சிக்கு புதியதடங்கல் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தங்கள் மேலுள்ள தடை நீக்கப்பட்டால்தான் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என நிபந்தனை விதித்துள்ளதால் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சைனயை முடிவுக்கு கொண்டு வர நார்வேதூதுக்குழு முயன்று வருகிறது. முன்னர் விடுதலைப் புலிகள் நிபந்தனையற்ற பேச்சவார்த்தை நடத்த சம்மதித்தனர்.

பின்னர் இலங்கை ராணுவத்தினர் தாக்குதலை நிறுத்தினால் பேச்சு வார்த்தை நடத்தலாம்என்றனர். அமைதிப் பேச்சு வார்த்தைக்கான சூழ்நிலைக்காக சண்டை நிறுத்தம்அறிவித்த விடுதலைப் புலிகள் இலங்கை அரசும் ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும் என கோரியது.

ஆனால் இதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து விடுதலைப் புலிகள்மீது தாக்குதல் நடத்தி வந்தது.

இந் நிலையில் பிப்ரவரி மாதம் பிரிட்டன் அரசு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடைவிதித்தது. இது புலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இப்போது அமைதிப் பேச்சை துவக்க வேண்டுமானால் தங்கள் இயக்கத்தின் மீதானதடையை நீக்க வேண்டும் என நார்வே தூதுக்குழுவினரிடம் அவர்கள்தெரிவித்துள்ளனர்.

மேலும் .தங்களுக்கு டீசல், பெட்ரோல், மருந்து, உணவுப் பொருட்களை வருவதைதடை செய்யக் கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துளனர்.

இலங்கை அரசு உணவு, மருந்து பொருட்களுக்கான தடையை நீக்கினாலும் டீசல்,மண்ணெண்ணெய் மற்றும் இடிந்து போன கட்டிடங்களை மீண்டும் கட்ட சிமெண்ட்போன்ற கட்டுமான பொருட்களும் தரப்பட வேண்டும். அவற்றின் மேலுள்ள தடையும்நீக்கப்பட வேண்டும் எனவும் புலிகள் கோரியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழ்ச் செல்வன் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டால்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தஒப்புக் கொள்வோம் என கூறிவிட்டார்.

சந்திரிகாவைக் கொல்ல வந்த புலி:

இந்நிலையில் இலங்கை சிறப்பு போலீசார் 16 வயதான பெண் விடுதலை புலியைகைது செய்துள்ளனர். இவர் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச்சேர்ந்தவர்.

இவர் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்யஅனுப்பப்பட்டவர். இதை அந்த பெண் புலியே ஒப்புக்கொண்டுள்ளார். தையடுத்துஅதிபருக்க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிவபாலன் ராஜநந்தினி என்ற அந்த பெண்புலி போலீசாரால்தான் மார்ச் மாதம் 19ம்தேதி திரிகோணமலையில் கைது செய்யப்பட்டார். இவர் பல தலைவர்களையும்கொலை செய்வதற்காக அனுப்பப்பட்டிருப்பது அவரிடம் விசாரிக்க வந்ததில்தெரியவந்ததை அடுத்து அனைத்து தலைவர்களுக்கும் காவல்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நார்வே தூதர் பேட்டி:

நார்வே தூதர் ஜான் வெஸ்ட்பெர்க் சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் அரசியல்தலைவர் திருச்செல்லவனிடம் வன்னியில் பேச்சுவார்த்தை நடத்தியபின் கூறுகையில்,நாங்கள் இப்போது எதுவும் கூற முடியாது.

விடுதலைப் புலிகளின் நிபந்தனைகள் குறித்து அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிடம்விவரிப்போம் என்றார்.

விடுதலைப்புல்கள் தங்கள் நிபந்தனைகள் ஒப்புக் கொள்ளப்பட்டால்தான் பேச்சுவார்த்தைக்கு சம்மதிப்பார்கள் என தெரிய வருகிறது.

இலங்கை தற்போது எந்த கருத்தும் கூறிவில்லை. அவர்கள் நார்வே தூதுக்குழுவினர்விடுதலைப் புலிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து விவரங்களை தெரிவிக்ககாத்திருக்கின்றனர்.

ஆனாலும். பல நாடுகளையும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்குமாறுஇலங்கை அரசு கேட்டுக் கொண்டது. இப்போது இலங்கை அரசு எவ்வாறு அவர்கள்மீதான தடையை நீக்க முடியும் என இலங்கை அரசு கேள்வி எழுப்புகிறது.

விடுதலை புலிகள் அறிவித்து அமலில் இருக்கும் சண்டை நிறுத்தம் இந்த மாதம் 24ம்தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு விடுதலைப் புலிகளின் நிபந்தனைக்களுக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால்அமைதிப் பேச்சு வார்த்தை தள்ளிப் போகும் என்பது நிச்சயம் என செய்தியாளர்கள்தெரிவிக்கின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X