For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாரிடம் அடுத்த ஆட்சி? ஞாயிறு பிற்பகல் முடிவு தெரியும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குநடப்பதையொட்டி வாக்குகளை எண்ணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் ஆணையம்கவனித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாரிடம் ஆட்சி என்பது தெரிந்து விடும் என்று தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் கவனித்துவருகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குகளை எண்ணுபவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வாக்குகளை எண்ணுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் வாக்கு எண்ணப்படும் இடங்களுக்குள்அனுமதிக்கப்படுவர்.

வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பூத் ஏஜன்டுகள் ஆகியோருக்கும்அனுமதி உண்டு. ஆனால் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் தேர்தல்அதிகாரிகள் வழங்கியுள்ள புகைப்பட அடையாள அட்டைகளைக் காட்டித்தான் உள்ளே செல்ல முடியும்.

வியாழக்கிழமை தேர்தல் நடந்து முடிந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் வாக்குகள் அடங்கிய பெட்டிகள்பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 101 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவேட்பாளர்கள், அவர்களது ஏஜன்டுகள் முன்னிலையில் போலீஸ் சூப்ரிடென்டன்ட், மாவட்டக் கலெக்டர்ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லொயலா கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி மற்றும் குயின் மேரிகல்லூரியில் வாக்குகளை எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பமாகிறது. முதல் சுற்று எண்ணிக்கை மூன்று மணி நேரத்தில்அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு 6 மணிநேரங்களில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிமற்றும் 234 சட்டசபைத் தொகுதிகளில் உள்ள முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X