For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகை பிடித்தால் புற்று நோய் வரும்

By Super
Google Oneindia Tamil News

மும்பை:

புகைப்பிடித்தால் வாய்புற்று நோய் வரும் என பல் மருத்துவர் எச்சரித்துள்ளார்.

உலக புகைப் பிடிப்பு தடுப்பு தினம் உலகம் முழுவதும் வியாழக்கிழமை கடை பிடிக்கப்படுகிறது. இந் நாளில் வாய்புற்றுநோய் விழிப்புணர்வு திட்டம் என்ற இயக்கத்தை தொட்ங்கியவரான பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்ரிகே கூறுகையில், இந்தியாவில் வாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவிகிதம் பேர் புகைப்பிடிக்கும்பழக்கம் உடையவர்கள். இந்த புற்று நோய் ஆரம்ப காலத்தில் குணப்படுத்தக் கூடியதுதான்.

உலக புகைப் பிடிப்பு தடுப்பு தினம் உலகம் முழுவதும் வியாழக்கிழமை கடை பிடிக்கப்படுகிறது. இந் நாளில் வாய்புற்றுநோய் விழிப்புணர்வு திட்டம் என்ற இயக்கத்தை தொட்ங்கியவரான பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்ரிகே கூறுகையில், இந்தியாவில் வாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவிகிதம் பேர் புகைப்பிடிக்கும்பழக்கம் உடையவர்கள். இந்த புற்று நோய் ஆரம்ப காலத்தில் குணப்படுத்தக் கூடியதுதான்.

வாய்புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிண்கை 3 வருடத்தில் 5 முதல் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பிழைப்பவர்கள் 25 சதவிகிதம் பேர்தான்.

வாய்புற்று நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து அதைப் பற்றிய விழிப்புணர்வுதான். மக்களிடம் புற்று நோய்பற்றியவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் லாபகரமாக இயங்கிவருகின்றன.

அவர்கள் செய்யும் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் பல இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்குஅடிமையாகிறார்கள்.

கல்லவியறிவின்மை காரணமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தின் தீமையை அறியாத பல கிராமத்தவரும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் கிராமத்தவர்களின்எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

வாய்புற்று நோயின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்குறிக்கோள். நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தவிருக்கிறேன்..

புகைப்பிடிப்பதனால் ஏற்படும் தீமை குறித்து பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா தியேட்டர்,தெருக்கூத்துகள் மூலம் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

சிகரெட்டை விட கொடியது பீடி:

உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர் மாராத்தா ஆர். ஓசெய் கூறுகையில், சிகரெட் பிடிப்பதை விட பீடி பிடிப்பதேமிகவும் அபாயகரமானது .

ஆனால் சிகரெட் பிடிப்பது நல்லது என கூறமாட்டேன். இரண்டுமே உயிர் கொல்லி நோய்களை ஏற்படுத்தக்கூடியவைதான்.

புகையிலையில் நிகோடின், காட்மியம், கார்பன் மோனாக்சைடு உ ள்ளிட்ட 4,000 மோசமான ரசாயனப் பொருட்கள்அடங்கியுள்ளன. இவை சிகரெட், பீடி இரண்டிலும் இருந்தாலும் பீடியில் அதிக அளவில் உள்ளன.

பீடி பிடிப்பதனால்தான் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பலரும் இறந்து போகிறார்கள்.

இந்தியாவில் சிகரெட் பிடிப்பவர்கள் 20 சதவிகிதம் பேர்தான். ஆனால் பீடி பிடிப்பவர்க ள் 40 சதவிகிதம் பேர்என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X