For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குருவின் திருவருள் பெற...

By Staff
Google Oneindia Tamil News

நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த பெரிய கிரகங்களாக கருதப்படுவது சனியும், குருவும்தான். அதனால்தான் சனி பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும்முக்கியத்துவம் பெறுகின்றன.

சனிபோல் கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது. சனி கொடுக்க எவர் தடுப்பர் என்ற கூற்று சனிபோல் கொடுப்பவர் எவரும் கிடையாதுஎன்பதை உணர்த்தும்.

குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். குரு பகவானின் அருள் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மிக முக்கியமானது, குருபலன் இருந்தால்பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும் எனவும், குருவின் அருள் இருந்தால் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையும்நிலவி வருகிறது.

குரு பகவானின் அருள் இருந்தால் தம்பதிகளுக்கு ஆண்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

குரு என்றும் நலம்மட்டுமே அருள்பவர். அவர் ஒரு ராசிவிட்டு மற்றொரு ராசிக்கு பெயரும்போது கூட தீய பலன்கள் எதுவும் ஏற்படாது.நற்பலன்கள் குறையலாமே தவிர நிச்சயமாக தீய பலன்கள் ஏற்படாது.

குருபகவானுக்கென்று தமிழகத்தில் தனி ஸ்தலமே உள்ளது. தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகே இருக்கும் ஆலங்குடி என்ற இடத்தில் குரு ஸ்தலம்இருக்கிறது. இங்கு சென்று குரு பகவானை வழிபடுவது சிறப்பு தரும்.

சிவ பெருமானின் தட்சிணாமூர்த்தி கோலமும், குரு என்றுதான் அழைக்கப்படுகிறது. தகப்பனுக்கே உபதேசம் செய்த முருகன், குரு ஷேத்திரமானதிருச்செந்தூருக்கு அதிபதி.

திருச்செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் ஸ்தலமும் குரு ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்கு சூரசம்ஹாரத்திற்கான ஆலோசனையில் முருகன்ஈடுபட்டிருந்த போது அங்கு குருபகவான் வந்தார்.

அப்போது அசுரர்கள் அனைவரைப்பற்றியும், அவர்களது பலம்,பலவீனம் பற்றியும் குரு பகவானிடம் முருகப்பெருமான் கேட்டறிந்ததாகவும்கூறப்படுகிறது.

அதன் பின் குருபகவான் முருகனை வழிபட்டு அவர் அருள் பெற்றார். சூரனை, அசுரனை, தீமையை முருகன் அழித்த தலம் திருச்செந்தூர். இங்கு குருவுக்கும் அருள்பாலித்தவர் முருகன். குருவுக்கு அருள்பாலித்த முருகனை வழிபட்டால் குருப் பெயர்ச்சியால் குறைவான நற்பலன்கள் பெற்றவர்களும் நிறைவானநற்பலன்கள் பெறுவார்கள் என்பது திண்ணம்.

குருவுக்கு பரிகாரம் என கூறுவதானால் வியாழக்கிழமைகளில் குருவுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபடலாம். தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ளகோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மேலும் முடிந்தவர்கள் தட்சிணாமூர்த்திக்கோ, அல்லது குருவுக்கோ அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, கொண்டைக் கடலையை (2 லிட்டர்) ஒரு பிளாஸ்டிக்தட்டிலோ அல்லது பிளாஸ்டிக் கூடையிலோ போட்டு தானம் செய்வது நல்லது.

இந்த தானம் கட்டாயம் கிடையாது. குரு பகவானின் அருள் மேலும், மேலும் வேண்டும் என்பவர்கள் செய்தால் மட்டும். போதும்.

குருபகவானை வழிபட சில ஸ்லோகங்கள்:
1. குருப்ரம்ஹோ
குருவிஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்ரம்ஹா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹா
குருவே சர்வலோஹானாம்
பீஷஷே பவரோஹினாம்
நிதயே சர்வ வித்யானம்
தட்ஷினா மூர்த்தியே நமஹ

2. குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரஹஸ்பதி வியாழப் பரகுரு தேவா
கிரகதோஷமின்றி காட்சித் தருள்வாய்.

குரு பகவான்- சில விவரங்கள்:
குருபகவானின் தேவகுரு - பிரகஸ்பதி
அசுரகுரு - சுக்ராச்சாரியார்
பூஜை செய்ய உகந்த மலர் -முல்லை
ஹோமம் செய்ய -அரச மர குச்சிகள், பசு நெய்
தானியம் - கொண்டைக்கடலை
வாகனம்- யானை
அதிதேவதை - பிரம்மா
நவரத்தினம் -புஷ்பராகம்
உலோகம்- தங்கம்
வஸ்திர நிறம் - மஞ்சள்
நிவேதனம் - வெண் பொங்கல்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X