For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாறன், பாலுவுக்கு எதிரான வழக்குகள் வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க, கைது செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும்டி.ஆர். பாலுவுக்கு எதிரான வழக்குகள் தமிழக அரசால் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, போலீஸாரைத் தாக்கியதற்காகவும்,அவர்களுடைய பணியைச் செய்ய விடாமல் தடுத்ததற்காகவும், மாறனும் பாலுவும் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டிருந்தாலும், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் மாறன். பாலு, வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதிலிருந்து, மத்திய அரசுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் முளைத்தன. இதுதவிர, தேசியஜனநாயகக் கூட்டணியின் மிக முக்கியக் கட்சியான திமுக தலைவரே கைது செய்யப்பட்டதால், நெருக்கடி மிகவும்அதிகரித்துள்ளது.

தமிழக நிலையை நேரடி ஆய்வு செய்ய வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குழுவும், மத்திய உள்துறை அமைச்சகம்அனுப்பிய குழுவும் தமிழக அரசைப் பற்றிக் காராசாரமான அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.

356வது அரசியல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, தமிழக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜார்ஜ்பெர்னாண்டஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழு தன்னுடைய அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையில் தமிழக அமைச்சர்கள் பொன்னையனும், தம்பிதுரையும் மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்துதமிழக நிலை பற்றி திங்கள்கிழமை எடுத்துக் கூறினர். மேலும், 2 மத்திய அமைச்சர்களை விரைவில் விடுதலை செய்ய அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். பின்னர், இவர்கள் ஜனாதிபதியையும் சந்தித்தனர்.

355வது அரசியல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, மத்திய அமைச்சர்களை விடுதலை செய்ய மத்திய அமைச்சரவை முடிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு முந்திக் கொண்டது. மாறனையும், பாலுவையும் விடுதலை செய்யும்உத்தரவை தமிழக அரசு திங்கள்கிழமை மாலை பிறப்பித்தது.

ஆனாலும், தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறாவிட்டால், இந்த விடுதலையைநாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று 2 மத்திய அமைச்சர்களுமே கூறி விடுதலையாக மறுத்தனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கும் மேலும் நெருக்குதல் தொடர்ந்தது.

மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்கவும், மத்திய அரசுடன் நட்புறவைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காகவும் அதிமுக அரசால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், மத்திய அமைச்சர்களைவிடுவிக்க தமிழக அரசுக்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோள் விடுத்திருப்பதன்காரணமாகவும்தான், அதிமுக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், 3வது முறையாக மத்திய அரசுக்கு வளைந்து கொடுத்துள்ளது தமிழக அரசு. முதலில், தமிழக அரசுக்கு ஆதரவாகவேஅறிக்கை கொடுத்ததற்காக, தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி நீக்கப்பட்டார்.

இரண்டாவதாக, மத்திய அரசின் நெருக்குதலுக்கு இணங்கி, 2 மத்திய அமைச்சர்களையும் விடுதலை செய்யவும் தமிழக அரசுஉத்தரவிட்டது.

மூன்றாவதாக, தற்போது அந்த மத்திய அமைச்சர்களின் மேல் வழக்குகளை வாபஸ் பெற்றதன் மூலம், மீண்டும் மத்திய அரசுக்குதமிழக அரசு வளைந்து கொடுத்துள்ளது.

இன்னும் 2 மணி நேரத்தில் மத்திய அமைச்சர்கள் விடுதலை:

மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் இன்னும் 2 மணி நேரத்தில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்போலோ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும்மாறன், தொடர்ந்து அங்கேயே இருப்பார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலு, இன்னும் 2 மணிநேரத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வருவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X