For Daily Alerts
கல்வீசிய 550 பேருக்கு காவல் நீட்டிப்பு
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தும், திங்கள்கிழமை நடந்த பந்த்தின் போதும் பஸ்கள் மீது கல்வீச்சில்ஈடுபட்ட 550 பேருக்கு மட்டும் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வீச்சு நடத்தியது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, வன்முறையில் இறங்கியது போன்றசம்பவங்களில் ஈடுபட்ட 550 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். கும்பலாகச் சேர்ந்து வன்முறையில்ஈடுபட்டதாகவும் இவர்கள் மீது வழக்கும் தொடரப் பட்டுள்ளது.
இதனால் இந்த 550 பேரும் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்படுவர். இவர்கள் அனைவரும் ஜூலை 14ம் தேதிவரை காவலில் வைக்கப்படுவர்.
இவர்கள் தவிர, மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்ட 30,000க்கும் மேற்பட்ட திமுகவினர் செவ்வாய்க்கிழமைவிடுதலை செய்யப்பட்டனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!