For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருவேப்பிலை சாப்பிட்டால் கேன்சர் போகும்

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் ஒரு புறநகர் பகுதியில் உள்ள பல இந்திய உணவகங்களிலும், ஆசிய உணவு வகைகளுக்குஅதிக வரவேற்பு காணப்படுகிறது.

இந்திய உணவு வகைகளில் மூலிகைகள், மிளகு, கிராம்பு போன்ற காரத் தன்மை கொண்ட பொருட்கள் மற்றும்கருவேப்பிலை போன்றவை வழக்கமாக இடம் பெற்றிருக்கும். இவைதான் சுவையான இந்திய உணவுக்கு மேலும்சுவை கூட்டும்.

கருவேப்பிலை மற்றும் முலிகைகளை சாப்பிட்டால் கேன்சர் போன்ற கொடிய வியாதியைக் குணப்படுத்த உதவும்என்று ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு ஆராய்ச்சி நிலையம் கூறியதை அடுத்து, தற்போது இவைகளுக்கானமுக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

மூலிகைகள், கிராம்பு, மிளகு போன்றவை உணவில் சுவைக்காக சேர்க்கப்பட்டாலும், இவை உடல் நலத்தையுமபாதுகாக்கும் தன்மை கொண்டவை என ஆஸ்திரேலிய உணவு கட்டுப்பாட்டுக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

இதுகுறித்து, லினே கோபியாக் என்ற விஞ்ஞானி கூறும்போது:

உலகெங்கும் பல விதமான மூலிகைகளையும் சோதனை செய்து பார்த்த போது, அவை கான்சர், இருதய நோய்போன்றவற்றை குணப்படுத்த உதவும் என கண்டறியப்பட்டது.

8ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பிரான்ஸ் நாட்டு அரசர் சார்லேமாக்னே என்பவர் மூலிகைகள் மருத்துவருக்குநண்பர் போன்றவை. இந்தியா மற்றும் சீனாவில் இருக்கும் உணவு சமைப்பவர்களுக்கு அவற்றின் மகத்துவம்தெரியும். அதனால் அவற்றை அவர்கள் தங்கள் தயாரிப்பில் சேர்ப்பார்கள் என புகழ்ந்து கூறியிருக்கிறார் என்றார்லினே.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் மிளகு, கிராம்பு மற்றும் மூலிகைகளின் திறனையும் அதிலிருந்தஅரிய சக்தியையும் அறிந்திருந்தார்கள். ஆனால் மேற்கத்திய மருத்துவர்கள் தாமதமாகத்தான் அவற்றின்மகத்துவத்தை உணர்ந்துள்ளனர்.

ஆசியாவின் பாரம்பரிய உணவு வகைகள் என்றுமே சுவைக்கு பெயர் போனவை. அந்த உணவு வகைகளில்சேர்க்கப்படும் கருவேப்பிலை போன்றவை நோயையும் குணப்படுத்தும் என தெரியவந்துள்ளதால் தற்போதுஅவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

கருவேப்பிலை , இஞ்சி தவிர பூண்டும் மருந்தாக பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூண்டைதினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புச் சத்து குறையும். மேலும் இதய நோய்களையும் குணப்படுத்த அவைஉதவும் என அவர்கள் கூறுகின்றனர்.

பூண்டிலிருந்து வரும் வாசனை காரணமாக பலரும் பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால் பூண்டில்இருக்கும் ஆன்ட்டி-கார்சினோஜினிக் குணம் நோய்களைக் குணப்படுத்த உதவும் என ஆராய்ச்சியாளர்கள்கூறுகின்றனர்.

மூலிகைள், கருவேப்பிலை மற்றும் மிளகு போன்ற காரப் பொருட்கள் போன்றவற்றில் இருக்கும் மருத்துவ சக்தியைஅறிந்து கொண்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் அவற்றை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது குறித்துயோசித்து வருகிறார்கள்.

அதே சமயம் மருத்து குணங்கள் கொண்ட இவை எல்லாம் தனித்தனியே பிரிக்கப்பட்டால் பயன்தருமா என்றசந்தேகமும் நிலவி வருகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X