3 மாத பெண் குழந்தையைக் கொன்ற தந்தை
தருமபுரி:
தருமபுரி அருகே பெண் சிசுவைக் கொலை செய்ததாக அந்தக் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி (42). அவருடைய மனைவிகவுரம்மா (35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
4வது குழந்தையும் பெண்ணாகப் பிறந்து விட்டதால், கணவன்-மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறு நடந்துவந்தது.
இந்நிலையில், கவுரம்மா வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த வேளையில், சர்க்கரை கலந்த எருக்கம்பாலைசெல்விக்கு சின்னசாமி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
திரும்பவும் கவுரம்மா வீட்டுக்கு வந்தபோது, குழந்தை செல்வி இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனேஇதுகுறித்து அவர் தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் சின்னசாமி மேல் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன்னர்தான், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண் சிசுஒன்று கொலை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மற்றொரு பெண் சிசு கொலை செய்யப்பட்ட சம்பவம்தொப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!