For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ்: இளங்கோவனின் நாட்கள் எண்ணப்படுகின்றன?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரசுக்கு, அ.தி.மு.கவிடம் இருந்து ஒரு புறமும், டெல்லியில் இருக்கும் தலைமையிடம் இருந்துமறுபுறமும் பிரச்சனைகள் கிளம்பியுள்ளன.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இளங்கோவன் இருக்கும்வரை காங்கிரசுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லைஎன அ.தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியின் உணர்வுகளை மதிக்காமல் முடிவு எடுத்து வருவதாககூறப்படுகிறது. இதற்கு டெல்லியில் இருக்கும் சில தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பும் வந்துள்ளது.

திங்கள்கிழமை சென்னை வந்த காங்கிரசின் தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான மணிசங்கர ஐயர்,இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைமை பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என பகிரங்கமாககூறினார்.

மேலும், தனித்து போட்டியிட்டால், காங்கிரஸ் வெற்றி பெற முடியாது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறவும்அ.தி.மு.கவுடன் இருந்து வரும் தொடர வேண்டும். அ.தி.மு.கவுடன் கூட்டணி வேண்டும் என்றால் இளங்கோவன்தமிழக காங்கிரஸ் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் மணிசங்கர ஐயர் கூறினார்.

தமிழகத்தில் இருக்கும் மற்றொரு காங்கிரஸ் தலைவரும், எம்.பியுமான சுதர்சன நாச்சியப்பனும், இளங்கோவன்தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பில்இருக்கும் குலாம் நபி ஆசாத்தும் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முடிவைஆதரிக்கிறார் என கூறப்படுகிறது.

ஆனால் அதே சமயம் காங்கிரஸ் காரிய கமிட்டியில் அங்கம் வகிக்கும் அர்ஜுன் சிங்கும், காங்கிரசின் மற்றொருபொதுச் செயலாளருமான அம்பிகா சோனியும் இளங்கோவனை ஆதரிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

காங்கிரசின் முன்னாள் மத்தியஅமைச்சர் பிரபுவை தவிர தமிழகத்தில் இருக்கும் பல காங்கிரஸ் தலைவர்களும்இளங்கோவனுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள்.

இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியதை எதிர்த்து புதன்கிழமை இளங்கோவனின்ஆதரவாளர்கள் மணிசங்கர ஐயரின் உருவ பொம்மையை சென்னையில் எரித்தனர். இளங்கோவனின்ஆதரவாளர்கள் மணிசங்கர ஐயரை அ.தி.மு.கவின் ஏஜென்ட் எனவும், அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை எதிர்த்து கும்பகோணத்தில் மணிசங்கர ஐயர் ஆதரவாளர்கள் இளங்கோவனின் உருவ பொம்மையைவியாழக்கிழமை காலை எரித்தனர்.

1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதன் பின் காங்கிரஸ் தமிழ்நாட்டில் இருக்கும் மற்றகட்சிகளின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியவில்லை. 1998ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், ஒருஇடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது கூட, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தயாராகஇல்லை. காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரசுடன் கொண்டிருந்த நட்புறவால் தான் காங்கிரஸ் அ.தி.மு.க.கூட்டணியில் இடம் பெற முடிந்தது. மேலும் அ.தி.மு.க. அதிக இடங்களை ஒதுக்கியதும் த.மா.கா.தலைவருக்காகத்தான் என்பதும் நினைவு கூறத்தக்கது.

பல சமயங்களில், தமிழக காங்கிரஸ் தலைவராக யார் நியமிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடமேஜெயலலிதா கூறி தனக்கு சாதமாக இருப்பவரையே தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்தும் இருக்கிறார். பலமுறை அவர் கூறியதை காங்கிரஸ் தலைமையும் கேட்டு செயல்பட்டது என்பதையும் மறக்க முடியாது.

தற்போது இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பகிரங்கமாக கூறியிருப்பது காங்கிரசைசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. இளங்கோவனைப் பதவி நீக்கம் செய்தால் அ.தி.மு.கவின் மிரட்டலுக்கு காங்கிரஸ்பணிந்தது என்ற பழி சுமத்தப்படுமோ என காங்கிரஸ் தலைமை யோசிப்பதாக தெரிகிறது.

ஆரம்பம் காலம் முதலே தமிழக காங்கிரஸ் கோஷ்டி பூசலுக்கு பெயர் போனது. இந்த கோஷ்டி பூசல்காரணமாகத்தான் 8 ஆண்டு காலம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த மூப்பனார் அந்த பதவியைதுறந்தார்.

1996ம் ஆண்டு மூப்பனார் காங்கிரசிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியதும்.காங்கிரசிலிருந்த பலரும் த.மா.காவில் இணைந்தனர்.

முன்னர் தமிழகத்தில் கோஷ்டி பூசல் தலைதூக்கிய போதெல்லாம் உடனே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்செய்யப்பட்டு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டு விடுவார்.

வாழப்பாடி ராமமூர்த்தி, குமரி அனந்தன், கே.வி. தங்கபாலு, திண்டிவனம் ராமர்த்தி ஆகியோரெல்லாம் சிறிதுகாலமே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து பதவி விலக்கப்பட்டதற்கும் கோஷ்டி பூசல்தான் காரணம்.

இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதும் மீண்டும் கோஷ்டி பூசல் தலைதூக்கி அவரைபதவி நீக்கம் செய்யச் சொல்லி கோரிக்கை வலுத்து வருகிறது.

காமராஜரின் 99வது பிறந்தநாள் விழாவின் போது மீண்டும் தமிழகத்தில் காமராஜ் ஆட்சி மலர வேண்டும் எனஇளங்கோவன் கூறியது, தமிழகத்தில் இருக்கும் இரண்டு திராவிட கட்சிகளின் கோபத்தையும் தூண்டி விட்டது.

அ.தி.மு.க இளங்கோவனுக்கு எதிரான தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படையாக தெரிவித்ததற்கும்இதுதான் காரணம்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் போதுகூட காங்கிரஸ் தலைமை அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதுபற்றியும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் பற்றியும் இளங்கோவனுக்கு முறையாகதெரிவிக்கவில்லை.

இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டது முதலே அ.தி.மு.க. அவரை ஒதுக்கிதான்வைத்துள்ளது.

இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பகிரங்கமாக கூறியுள்ள நிலையில் முக்கியமாககவனிக்க வேண்டிய விஷயம், இளங்கோவனின் தாய் சுலோசனா சம்பத் அ.தி.மு.கவின் பெண்கள் அணிதலைவியாக இருக்கிறார் என்பதுதான்.

இளங்கோவனின் தற்போதைய நடவடிக்கைகளைக் கண்ட சுலோசனா, "இப்படி உளறிக் கொண்டிருக்கும் மகனைஏன்தான் பெற்றேனோ?" என்று வேதனையுடன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X