For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீக்கியர்கள் மீது தாக்குதல் - இந்தியத் தூதரகம் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

இந்தச் சூழ்நிலையில் தனக்கு எப்படியும் மேயர் தேர்தலுக்கான டிக்கெட் கிடைத்து விடும் என்ற அபரிமிதமானநம்பிக்கையில் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளார் கராத்தே. இருப்பினும் ஜெயலலிதாவின் மனதில் அவர்இல்லை என்று கூறப்படுகிறது. அதற்குப் பல காரணங்களையும் அ.தி.மு.க. வட்டாரம் எடுத்து வைக்கிறது.

கராத்தே பாலசுப்ரமணியம் நீண்டகாலமாக அ.தி.மு.கவில் தொண்டராக இருந்தவரில்லை. சமீபத்தில்தான் அவர்அ.தி.மு.கவுக்கு வந்தார். இது ஒரு மைனஸ் பாயிண்டாக கூறப்படுகிறது.

மேலும், சென்னை மாநகர மேயர் பதவி என்பது கெளரவமான ஒன்று. 300 ஆண்டு கால பழமையான வரலாற்றைக்கொண்ட மேயர் பதவியில் வயதில், அனுபவத்தில் குறைந்த, பாடிகார்ட் இமேஜ் இன்னும் மறையாத ஒருவரைஅமர்த்துவதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கராத்தே பாலசுப்ரமணியத்திற்கு டிக்கெட் கொடுத்தால் நீண்ட காலமாக கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள்அதிருப்தியடைவார்கள் என்றும் முதல்வர் நினைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேறு ஒரு வேட்பாளரைஜெயலலிதா நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்படி நேரும் பட்சத்தில், மேயர் பதவிக்குரிய நபராக சுலோச்சனா சம்பத்தை அ.தி.மு.க வட்டாரம்முன்னிருத்துகிறது. நீண்ட காலமாக அதிகவில் இருப்பவர், மூத்த தலைவர்களில் ஒருவர், நீண்ட நிெடியஅரசியல் தொடர்பு கொண்டவர், திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவரான ஈ.வே.கே..சம்பத்தின் மனைவி,பெரியாரின் மருமகள் என்ற பல பெருமைகளைக் கொண்ட சுலோச்சனா சம்பத்திற்கு டிக்கெட் கொடுத்தால் அதுஅவரது வெற்றிக்கு பெரும் பலமாக இருப்பதோடு, கட்சிக்குள்ளும் முனுமுனுப்பை ஏற்படுத்தாது என்றுஅ.தி.மு.க வட்டாரம் கருதுகிறது.

மேலும், பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருவதை ஜெயலலிதா வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் மேயர் பதவியில் ஒரு பெண் அமர்வதை அவர் அதிகம் விரும்புவார் என்றும் கட்சி வட்டாரத்தில்பேசப்படுகிறது.

அதற்கு மேலும், ஸ்டாலினுக்கு எதிராக வலுவான, உறுதியான, நல்ல இமேஜ் கொண்ட வேட்பாளரை நிறுத்தினால்மட்டுமே வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்று ஜெயலலிதா கருதுகிறார். அதற்கு சரியான நபராகசுலோச்சனா சம்பத் இருப்பார் என்று அ.தி.முகவில் சில பெரும் தலைவர்கள் கருதுகிறார்கள். இதுகுறித்துஜெயலலிதாவிடம் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

அ.தி.முக ஆட்சிக்கு வந்த பிறகு பலருக்கு நல்ல பதவிகள் கொடுத்து அழகு பார்த்த ஜெயலலிதா சுலோச்சனாசம்பத்திற்கு கட்சிப் பணியைத் தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை. சுலோச்சனா சம்பத்தை விட ஜூனியரானபா.வளர்மதிக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது சுலோச்சனா சம்பத்திற்கு ஆரம்பத்திலேயே அதிருப்தியைக்கொடுத்ததாக கூறப்படுகிறது. தனது குறலையும் அவர் ஜெயலலிதாவிடம் அப்போதே தெரிவித்ததாககூறப்படுகிறது. அப்போது, நேரம் வரும்போது பொருத்தமான பதவியைத் தருவதாக ஜெயலலிதாசமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மகளிர் அணித் தலைவியாக தற்போது சுலோச்சனா சம்பத் உள்ளார். அவருக்கு கீழ்தான் துணைத் தலைவியாகபா.வளர்மதி உள்ளார். எனவே சுலோச்சனாவை தற்போது மேயர் தேர்தலில் நிறுத்த ஜெயலலிதா முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுலோச்சனா சம்பத் நிறுத்தப்பட்டால் அதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு கிளம்பாது என்றும் கூறப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் தாயார்தான் சுலோச்சனா சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது.

இளங்கோவனுக்கும், சுலோச்சனா சம்பத்திற்கும் கட்சி சார்பாக கருத்து வேறுபாடு நிறையவே இருந்தாலும் கூடசுலோச்சனாவின் வெற்றிக்கு இளங்கோவன் ஒத்துழைப்பார் என்று அ.தி.முக தரப்பு கருதுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் சென்னை மேயர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் சுலோச்சனா சம்பத் போட்டியிடலாம்என்ற பேச்சே அதிகம்உள்ளது. அதே சமயம், மாநகராட்சிக் கூட்டங்களில் திமு.கவுக்கு எதிராக நெருக்கடிகொடுத்து, அவர்களைத் திணறடித்த கராத்தே பாலசுப்ரமணியத்தை ஏமாற்ற விரும்பாமல் துணை மேயர் பதவியைஅவருக்குக் கொடுக்கலாம் என்று பேச்சு உள்ளது.

இருப்பினும் ஜெயலலிதாவின் மனதை அவரைத் தவிர வேறு யாருமே அறிய முடியாது என்பதால் வேட்பாளர் யார்என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X