For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கானைவிட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறும் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்கலாம் என்பதால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தலைநகர் காபூலில் இருந்து கூட்டம்கூட்டமாக வெளியேறி வருகின்றனர். ஆனால், அவர்களை வெளியே போக விடாமல் தலிபான்கள் தடிகளால் அடித்து திருப்பிஅனுப்பி வருகின்றனர்.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆப்கானிஸ்தானில் வெறும் போர் மட்டுமே மிச்சியிருக்கிறது. 20 சதவீத மக்கள்பட்டினியால் வாடி வருகின்றனர். கல்வி நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. பள்ளி வாசல்கள் தான் கல்விக் கூடங்களாக இருந்துமத போதனைகள் நடத்தி வருகின்றன.

டி.விக்கு தடை விதிக்கப்பட்டது. டேப் ரெக்கார்டகள், பாடல்கள், இசைக்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது. நாட்டின் 80 சதவீதபகுதியில் மின்சாரம் இல்லை.

கணவர், சகோதரர், தந்தையுடன் மட்டுமே பெண்கள் வெளியே வரலாம். தனியே வெளியே வரக் கூடாது. உடலை முழுவதுமாகமறைத்துக் கொண்டு தான் வர வேண்டும்.

தாடி வைக்காத ஆண்களுக்கு 1 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட கற்காலத்திற்கு ஆப்கானிஸ்தானைஇழுத்துச் சென்றுவிட்டனர் தலிபான்கள்.

மக்களுக்கு தலிபான்கள் தருவது போரையும் மோதல்களையும் மத போதனைகளையும் மட்டுமே.

ஏற்கனவே நொந்துபோய் வாழ்ந்து வரும் ஆப்கானியர்களை அமெரிக்கத் தாக்குதல் மேலும் மிரளச் செய்துள்ளது. அரை பட்டினிவாழ்வோடு மாபெரும் தாக்குதலையும் சந்திக்கும் பலம் அந்த அப்பாவி மக்களுக்கு இல்லை.

இதனால் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறி பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானியர்கள் கைகளில் குழந்தைகளைஏந்தியவண்ணம் குவிந்து வருகின்றனர். ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் தோக்ராம் என்ற இடத்தில் கம்பி வேலிகளை முட்டியவண்ணம் நிற்கும் அந்த மக்களை தலிபான் வீரர்கள் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். அவர்களை மீண்டும்ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் ஆட்சியாளரும் தலிபான் படைகளின் தலைவருமான முல்லா முகம்மத் ஒமர் ரேடியோவில் பேசுகையில்,ஆப்கானியர்கள் என் பெருமையோடு இஸ்லாத்தை பாதுகாக்க தைரியமாக நில்லுங்கள். நம்மை பிரிட்டன் தாக்கியது. பிறகுரஷ்யா தாக்கியது. அப்போதெல்லாம் ஒசாமா பின் லேடன் இங்கே இல்லை. ஆனாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டுதாக்கினார்கள். உலகின் பல வல்லரசுகளையும் நாம் வீழ்த்தி திருப்பி அனுப்பியுள்ளோம். இப்போது ஒசாமாபின் பெயரைசொல்லிக் கொண்டு தாக்க வருகிறார்கள். அதையும் வெல்வோம் என்றார்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக மாறி மாறி போரை மட்டுமே சந்தித்து வரும் மக்கள் இது போன்ற வீர உரைகளையும்வசனங்களையும் கேட்கும் நிலையில் இல்லை. போராடு வறட்சியும் சேர்ந்து வாட்டுவதால் மக்கள் வாடிப் போய் வெறுப்பின் உச்சகட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தீவிரவாதத்தை ஆதரிப்பதால் ஆபகானிஸ்தானுக்கு உதவ எந்த நாடும் முன் வரவில்லை. பாகிஸ்தானிடமிருந்து ஆப்கானிஸ்தான்தீவரவாதிகளுக்கு ஆயுதங்கள் தான் வருகிறதே தவிர பொது மக்களுக்கு உணவோ, மருந்தோ வரவில்லை.

தனது 6 குழந்தைகளுடன் காபூலில் வசித்து வரும் லீலமா (38) என்ற பெண் கூறுகையில், இங்கு வாழ்க்கையில் எந்த சந்தோஷமும்இல்லை. அமெரிக்க குண்டுகள் என் வீட்டில் விழுந்து நாங்கள் அனைவருமே இறந்தாலும் நான் கவைலப்பட மாட்டேன். இதுபோன்ற ஒரு நாட்டில் வாழ்வதைவிட செத்துப் போவது மேல் என்றார்.

தங்களிடம் மிச்சம் மீதியிருக்கும் பணத்தைக் கொண்டு வேக வேகமாக உணவுப் பொருள்களை வாங்கி சேமிக்கஆரம்பித்துள்ளனர் ஆப்கான் மக்கள். போர் ஆரம்பித்துவிட்டால், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் மிரண்டு போய்உள்ளனர் அப்பாவி ஆப்கனியர்கள்.

தலிபான் படையினரின் தடியடியும் பொருட்படுத்தாது பாகிஸ்தான் எல்லையில் தனது 4 குழந்தைகளோடு கண்ணீரோடு நின்றுகொண்டுள்ள சபீரா என்ற பெண் கூறுகையில், அமெரிக்க தாக்குதலில் எனது 2 பையன்களும் 2 பெண்களும் செத்துப் போவதைப்பார்க்க நான் விரும்பவில்லை. அதனால் தான் பாதுகாப்பாக வெளியேற நினைக்கிறேன் என்றார்.

சில சிறுவர்கள் தலிபான்களின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டனர்.பாகிஸ்தான் பகுதியில் நின்று கொண்டு ஆப்கன் பகுதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்த அப்துல் என்ற 9 வயது சிறுவன்கூறுகையில், எனது தந்தையும் தாயும் எல்லையில் சிக்கிவிட்டனர். நான் உள்ளே வந்துவிட்டேன். இனி எக்காரணம் கொண்டும்ஆப்கானிஸ்தானுக்குள் போக மாட்டேன். எப்படியாவது எனது பெற்றோர்களும் இங்கே வந்துவிடுவார்கள் என்றான்.

பி.டி.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X