ராமேஸ்வரத்திற்கு அகதிகள் வருகை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த 14 தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாகவந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்படும் தமிழர்கள் அங்கிருந்து படகுகள்மூலமாக தப்பி ராமேஸ்வரத்திற்கு வந்து சேருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு 9 அகதிகள் இப்படித் தப்பி தனுஷ்கோடி பகுதிக்கு வந்து சேர்ந்தனர். தற்போது மேலும் 14பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள். அந்தப் பகுதியில்நடந்த மோதலில் இவர்களில் சிலர் காயம் பட்டுள்ளனர்.
14 பேரையும் போலீஸார் விசாரணைக்குப் பின் மண்டபம் முகாமில் சேர்க்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications