ஜெ. ராஜினாமா செய்ததாக மீண்டும் வதந்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற வதந்தி பரவியதையடுத்து,சென்னையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஜெயலலிதா முதல்வராக நீடிப்பதை எதிர்க்கும் வழக்கு விசாரணை, அவருக்குப் பாதகமான நிலையை நோக்கிச்சென்று கொண்டிருப்பதால், அவர் ராஜினாமா செய்துவிட்டார் என்ற வதந்தி கடந்த 2 வாரங்களாகவே பலமுறைபரவி வந்தது.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) அவர் கோட்டைக்கு வரவில்லை. அவர் ஏன் வரவில்லை என்பதற்கானகாரணம் உறுதியாகத் தெரியவில்லை.

இதையடுத்து, ஜெயலலிதா தன் பதவியை ராஜினாமா செய்து விட்டதால்தான் அவர் கோட்டைக்கு வரவில்லைஎன்ற வதந்தி காட்டுத் தீ போல பரவியது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் இந்த வதந்தி கடுமையாகப் பரவியது.

இதனால் சென்னை நகரமே பெரும் பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

ஜெயலலிதா உண்மையிலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா என்பது பற்றி உறுதியான தகவல்எதுவும் இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற