ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்லூரி ஆசிரியர் திட்டியதால் மாணவர் மனம் வெறுத்து, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வண்ணாரப்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த பூபதி என்பவரின் மகன் பாலசுப்ரமணியம். இவர்ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென அவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸார் விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பாலசுப்ரமணியத்தை அவரதுஆசிரியர் ஒருவர் திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்து பாலசுப்ரமணியம் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்தது.

இதையடுத்து கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். போலீஸார் விரைந்துவந்து மாணவர்களைச் சமாதானப்படுத்தி கலைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற