டெல்லி:
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்தைநிறுத்திக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்காவில் தீவிரவாதிகள் கடத்தி தாக்குதல் நடத்தப் பணன்படுத்தியவிமானங்களில் 2 விமானங்கள் யுனைட்டெட் ஏர்லைன்சிற்குச் சொந்தமானது.
இவ்வாறு 2 விமானங்களை இழந்ததை அடுத்து தனது விமான சேவையைக் குறைத்துக்கொள்ளப்போவதாகயுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான விமானப்போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம்அறிவித்துள்ளது. மேலும் இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படுமா என்ற தகவலும்தெரிவிக்கப்படவில்லை.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!