பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி- 40 பேர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியால்கோட் அருகே புல்அலிக் என்ற இடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்தசந்தையில் இன்று (புதன்கிழமை) இந்த குண்டு வெடித்தது.

சைக்கிளில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கூடியிருந்த இடத்தில் குண்டுவெடித்ததால் பெருத்த சேதம் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே 5 பேர் இறந்தனர்.

காயமடைந்தவர்களில் 10 பேரில் நிலைமை மோசமாக உள்ளது.

பின்லேடனைப் பிடிக்க ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவுவதற்கு பலமதவாதக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் அவர்கள்திட்டமிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்திலும் ஒரு பிரிவினர் அதிபர் முஷாரபின் முடிவை எதிர்த்து வருகின்றனர்.

இந் நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற