ஆப்கான் மத குருக்கள் கூட்டம் நாளையும் நடக்கிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானில் கூட்டப்பட்டுள்ள மத குருமார்களின் கூட்டம் நாளையும் நடக்கும் என தலிபான் அறிவித்துள்ளது.

பின் லேடனை அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கக் கோரியுள்ளதையடுத்து மத குருமார்களிடம் தலிபான் அரசு ஆலோசனைகேட்டுள்ளது.

நேற்று நடப்பதாக இருந்து இன்று துவங்கிய மத குருமார்களின் கூட்டம் நாளையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து உரிய ஆதாரம் கிடைக்காத வரை பின் லேடனை அவர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என இக்கூட்டத்தில் பேசிய தலிபான் அதிகாரிகள் கூறினர்.

இந் நிலையில் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என அஞ்சப்படுவதால் ஆப்கானிஸ்தானின் நகர் பகுதிகளில்இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்குள் நுழைய அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதித்து மறுத்து வருவதால் உள் நாட்டுக்குள்ளேயே வேறுஇடங்களுக்கு அவர் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

அண்டை நாடான ஈரான், தஜிக்கிஸ்தான் ஆகியவையும் ஆப்கானிஸ்தான் எல்லையை மூடிவிட்டு ராணுவத்தை உஷார் நிலையில்நிறுத்தியுள்ளன.

தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் டி.வியே இல்லை. இதனால் உலகின் பிற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதுகூட இந்தப் பகுதி மக்களுக்குத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் அரசு ரேடியோ கூறும் செய்திகளை வைத்துத் தான் அவர்கள்ஓரளவுக்கு விவரங்களைத் தெரிந்து கொள்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற