மேட்டூர் அணை நீர் இருப்பை நிரூபிப்போம்: கர்நாடக அரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மேட்டூர் அணைக்கு நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வந்து கொண்டிருப்பது என்பதை காவிரி நதி நீர்ஆணையக் கூட்டத்தின் போது ஆதாரத்துடன் நிரூபிப்போம் என்ற கர்நாடக அரசு அறவித்துள்ளது.

கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்றுதமிழக அரசின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூரில் நடந்தது.

இந்த கூட்டம் முடிந்த பின் கர்நாடக நீர்பாசன துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சிகுறைந்துள்ளது. மேலும் கர்நாடகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால்வறட்சியின் பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

காவரி நதி நீர் ஆணைய கூட்டம் வரும் 22ம் தேதி டெல்லியில் கூடவுள்ளது. இதில் நான்கு மாநில அதிகாரிகள்கலந்து கொள்வார்கள்.

காவிரி நிலை குறித்து பல முறை கர்நாடகம் எடுத்துரைத்துள்ளது. இருப்பினும் காவிரி நதி நீர் ஆணையகூட்டத்திலும் கர்நாடகம் பங்கேற்கும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில்பங்கேற்கவுள்ளோம்.

மேட்டூர் அணையில் தற்போது 8.364 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. இரண்டு நாட்களாக மேட்டூருக்கு நாள்ஒன்றுக்கு 1 டி.எம்.சி. நீர் வந்து கொண்டிருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது.

இந்த விவரங்களை காவிரி நதி நீர் ஆணையத்தில் எடுத்துக் கூறுவோம் என்றார் பாட்டீல்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற