உ.பியில் கொத்தடிமைகளாக இருந்த 4 தமிழ்ச் சிறுவர்கள் மீட்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை:

உத்திரபிரதேச மாநிலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள்மீட்கப்ட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ராமு, பழனிக்குமார்.அதேபகுதியில் உள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், பிச்சைப்பாண்டி ஆகியோர். இந்த 4சிறுவர்களும் உத்ததிரப்பிரதேச மாநிலத்தில் திவேரியா மாவட்டத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்ட்டிருப்பதாகஅவர்களது பெற்றோர் புகார் செய்தனர்.

இதையடுத்து மாநிலக் கொத்தடிமை ஒழிப்புத்துறை சிறப்பு அலுவலர் டேவிதார், மற்றும் சோக்கோஅறக்கட்டளையினர் திவேரியா மாவட்டக் கலெக்டரைத் தொடர்புகொண்டனர்.

அவரிடம் தமிழகச்சிறுவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பது பற்றியும், அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்துள்ள குபேந்திரன்என்பவரைப் பற்றியும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் குபேந்திரனைக் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அந்த 4 சிறுவர்களையும் மீட்டு அங்குள் சிறுவர் விடுதி ஒன்றில் தங்க வைத்தனர்.

இஅன்னும் சில நாட்களில் அவர்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு அவர்களின் பெற்றோரிடம்ஒப்படைக்கப்படுவார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற