பாகிஸ்தானில் போலீஸ்-தீவிரவாதிகள் மோதல்: 2 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானைத் தாக்க அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவுவதைக் கண்டித்து இஸ்லாமாபாத்திலும் கராச்சியிலும் நடந்தபேரணிகளில் ஏற்பட்ட வன்முறையில் 2 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவுக்கு தங்கள் நாடு உதவுவதை பல பாகிஸ்தானியர்கள் எதிர்த்து வருகின்றனர். அதிபர் பர்வேஸ் முஷாரபின் முடிவைக்கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்புக்கு பல தீவிரவாத ஆதரவு அரசியல் கட்சிகளும் மதவாத அரசியல்கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்தன.

இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனங்களில் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. பள்ளிகள், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் நாடு முழுவதும் கண்டன ஊர்வலங்கள் நடத்தினர்.பல இடங்களில் இந்த ஊர்வலங்கள் வன்முறையில் முடிந்தன.

அமெரிக்காவை எதிர்த்து நடந்த இந்த ஊர்வலங்களைக் கலைக்க போலீசார் பல இடங்களில் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆப்கானிஸ்தானைத் தாக்க உதவினால் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவே புனிதப் போர் தொடுப்போம் எனபல மதத் தலைவர்கள் இந்த ஊர்வலங்களில் பேசினர்.

பல இடங்களில் அமெரிக்க அதிபர் புஷ்சின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.

கராச்சியில் தங்களைத் தாக்கிய போலீசார் மீது தீவிரவாத அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீசார் திருப்பிச்சுட்டனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

போலீசாரிலும் 10 பேர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகளுக்கு ஆயுதம் தந்து பயிற்சி அளித்து காஷ்மீருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் அனுப்பிக் கொண்டிருந்த பாகிஸ்தான்இப்போது அதே தீவிரவாதிகளால் தாக்குதல்களுக்கு உள்ளாக ஆரம்பித்துள்ளது. வினை விதைத்த பாகிஸ்தான் வினை அறுக்கஆரம்பித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற