காஷ்மீர் எல்லையில் அமைதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கடந்த சில நாட்களாக இந்திய- பாகிஸ்தான் எல்லையில் எல்லையில் அமைதி நிலவி வருவதாக இந்திய எல்லைப்பாதுகாப்புப் படைத் தலைவர் குர்பச்சன் ஜகத் கூறினார்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதையடுத்து, காஷ்மீர் பகுதிகளில் உள்ளதீவிரவாதிகள் அனைவரும் ஆப்கானிஸ்தானுக்கு வரவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முல்லா உமர் கூறினார்.

இதையடுத்து காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட முஜாஹிதீன், லஸ்கர்-ஏ-தொய்பா உட்பட அனைத்துத்தீவிரவாத அமைப்பினரும் ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்திய எல்லையில் நிறுத்தப்ட்டிருந்த பாகிஸ்தானியப் படையில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானில்இருந்து வரும் தாக்குதலைத் தடுக்க, ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைக்குச் சென்றுவிட்டனர்.

இதனால் காஷ்மீர் எல்லையில் அமைதி நிலவுகிறது. இதுகுறித்து எல்டிைலப் பாதுகாப்புப்படைத் தலைவர் ஜகத்கூறியதாவது:

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் பணிமூட்டம் அதிகமாக இருப்பதால், ஊடுறுவல் அதிகமாகஇருக்கும். இதனால் நம் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் சண்டை நடக்கும். ஆனால் இப்போது அவ்வாறுஎந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

தீவிரவாதிகள் அனைரையும் அமெரிக்காவிற்கு எதிரான புனிதப்போரில் கலந்துகொள்ளுமாறு, தலிபான் இயக்கத்தலைவர் முல்லா உமர் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று இவர்கள் அங்கு சென்றிருக்கலாம்.

காஷ்மீரில் மனித உரிமை மீறப்படுகிறது என்று ஹூரியத் கமிட்டி போன்ற அமைப்புகள், மிகைப்படுத்திக்கூறிவருகின்றன. ஆனால் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள தாக்குதல் பற்றி அவர்கள் ஏன் வாய்திறக்கவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற