தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்களுக்கான இலாகாக்களை இன்று(சனிக்கிழமை) அறிவித்தார்.

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் உள்துறை அமைச்சகத்தையும், பொது நிர்வாகஅமைச்சகத்தையும் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார். மற்ற அமைச்சர்களுக்கானஇலாகாக்களையும் இன்று ( சனிக்கிழமை) அறிவித்தார்.

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா முதல்வரானது செல்லாது என்று நேற்று(வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது முதல்வர் பதவி ரத்தானது.

இதைத் தொடர்ந்து கூட்டப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பெரியகுளம்எம்.எல்.ஏ. ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று(வெள்ளிக்கிழமை) பன்னீர் செல்வமும் மற்ற 23 அமைசர்களும் பதவியேற்றனர்.

சனிக்கிழமை முதல்வர் பன்னீர் செல்வம் அமைச்சர்களுக்கான இலாகாக்களைஅறிவித்தார்.

பன்னீர் செல்வம் இதுவரை தான் வகித்து வந்த வருவாய்த்துறை அமைச்சகபொறுப்பையும், ஜெயலலிதா வசமிருந்த உள்துறை மற்றும் பொது நிர்வாகஅமைச்சகத்தையும் தன் வசம் வைத்துக் கொண்டுளளார்.

கே. பாண்டுரங்கன் தொழில்துறை அமைச்சராகிறார்.

இவர் வகித்து வந்த கிராமபுற வளர்ச்சித்துறை அமைச்சகம் தொழில் துறை அமைச்சராகஇருந்த ஆர்.வைத்தியலிங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தவிர அமைச்சரவையில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மற்ற எல்லா அமைச்சர்களுக்கும் முன்பு அவர்கள் வகித்த பொறுப்பே மீண்டும்கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஏ.கே. செல்வராஜ் வசமிருந்த வீட்டுவசதி வாரியம் மறும்நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளசெ.மா.வேலுசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற