உதவியாளரைத் தாக்கிய வழக்கில் சுதாகரனுக்கு ஜாமீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உதவியாளர் கோ ஸ்ரீதர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்குசென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி சுதாகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில்திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், ரூ. 25,000 ரொக்கம் மற்றும் அதேதொகைக்கான இரு நபர் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். தேவைப்படும்போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றுநிபந்தனையும் விதித்தார்.

ஏற்கனவே சுதாகரன், போதைப் பொருள் மறைத்து வைத்திருந்ததாக தொடரப்பட்ட 2 வழக்குகளில் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற