திமுக கூட்டணியில் தொடர்கிறது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவுடனான கூட்டணி தொடர்கிறது. கருத்து வேறுபாடுகளை களைவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியேமுன்வந்துள்ள காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர்திருமாவளவன் கூறியுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்த காரணத்தால் அந்த கூட்டணியிலிருந்து விலகிதிமுக கூட்டணியில் இணைந்தது விடுதலை சிறுத்தைகள் இயக்கம்.

அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் திமுகதலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளது பாமக.

இந்நிலையில் பாமகவுடன் இணைந்து ஒரே கூட்டணியில் செயல்படுவது இயலாது என்று கூறி வந்தார்திருமாவளவன்.

இந்நிலையில் அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில்திமுகவுடனான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் தொடர்ந்து நீடிக்கும் என்று திருமாவளவன் நேற்று(செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசிய பின் அவர் இந்த முடிவை அறிவித்தார். அவர் செய்தியாளர்களிடம்அளித்த பேட்டியில் கூறியதாவது:

திமுகவுடனான எங்கள் கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுவுடன்புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும்.

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்த போது எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை. அப்போது எங்களுகிகும்பாமகவுக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை நீக்குவதற்கு அதிமுக தலைமை முயற்சிஎடுக்கவில்லை,

திமுக தலைவர் கருணாநிதி கருத்து வேறுபாடுகளை நீக்க முயற்சி எடுத்தார். எங்களுடன் கலந்து ஆலோசனை செய்தபின்புதான் பாமகவை திமுக கூட்டணியில் இணைப்பது குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தால் நாங்கள் பாமகவின் உறவை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. நாங்கள் அதில் அங்கம் வகிக்கவில்லை. திமுகவுடன்நட்புறவு கொண்டுள்ளோம். நாங்கள் புதிதாக கூட்டணிக்கு வரவில்லை. கூட்டணியில் ஏற்கனவே இருந்துவருகிறோம். ராமதாஸ் தானாக முன் வரும்போது கருத்து வேறுபாடுகளை அகற்றி முரண்பாடுகளையும் களையவேண்டும்.

ராமதாசுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வதற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை.

கூட்டணி குறித்து எங்கள் அமைப்பினரோடு பேச்சுவார்த்தை ஆலோசித்த போது, கடலூர், பெரம்பலூர், மற்றும்விழுப்புரம் மாவட்டங்களில் எங்கள் இனத்தவர்கள் பலரும் பாமகவால் பாதிப்படைந்துதள்ளது தெரிய வந்தது.

எனவே அந்த மாவட்ட நிர்வாகிகள் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற