திமுகவிடம் மேயர் பதவி கேட்கும் விடுதலை சிறுத்தைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு ஒரு மேயர்தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என்று அக் கட்சியின் தலைவர் திருமாவளவன்கோரியுள்ளார்.

அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சிதேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்விடுதலை சிறுத்தைகள் அமைப்பு போட்டியிடுகிறது.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் சேர்ந்தாலும் விடுதலை சிறுத்தைகள் அமைப்புதொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கும். இவ் விஷயத்தில் எங்கள் அமைப்பில் ஒருமித்தகருத்து ஏற்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்திற்கு ஒரு மேயர் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும்.சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாநகராட்சியில் ஏதாவது ஒரு மேயர்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று திமுகவின் தேர்தல் பணிக்குழுவிடம் கேட்டுக்கொள்ள உள்ளோம்.

ஆனாலும் கூட்டணி கட்சிகளிடையே எந்த விதமான பிரச்சனையும் ஏற்பட காரணமாகஇருக்க மாட்டோம்.

திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதைநாங்கள் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. இதனால் பிரச்சனையும் ஒன்றும்இல்லை.

உசிலம்பட்டி பகுதியில் உள்ள 4 பஞ்சாயத்து தொகுதிகளில் தலித்கள் போட்டியிடஅனுமதிக்க மாட்டோம் எனவும், போட்டியிடும் வேட்பாளர்களை கொல்வோம் எனவும்ஒரு பிரிவினர் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதை கண்டித்து அடுத்த மாதம் 2ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற