காங்கிரசுடன் கூட்டணி வைக்க அலையும் அதிமுக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்து அதிமுக மேலிடத் தலைவர் ஒருவர் சோனியாகாந்தியின் உதவியாளருடன் பேசியதாகவும், அதற்கு காங்கிரஸ் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி பற்றிப் பேச, அதிமுக அழைப்பு விடுக்காமல்இருந்தது. ஆனால் த.மா.கா. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தியது.

இதனால் வெறுப்படைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் டெல்லி சென்று அதிமுகவுடன் கூட்டணிவைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிடப்போவதாகவும், 3-வது அணி அமைக்கவிருப்பதாகவும் அறிவித்தது.

ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக கூட்டணிக்குப் போனதால்,காங்கிரசையும் விட்டுவிட்டால் வெற்றிவாய்ப்பு பாதிக்கும் என்று அதிமுக தரப்பில் கருதுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) அதிமுக தலைமைக்கழக நிர்வாகி ஒருவர் சோனியா காந்தியின் உதவியாளர்வின்சென்ட் ஜார்ஜை தொடர்பு கொண்டாராம். அவரிடம் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைய வேண்டும்என்றும் கூறினாராம்.

மேலும் காங்கிரசுக்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவியை விட்டுத்தர அதிமுக தயாராக இருப்பதாகவும்அவர் கூறினாராம். நகராட்சிகளில் விரும்பும் இடங்களை அதிமுக விட்டுத்தரவும் தயாராக இருப்பதாக அவர்கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கு காங்கிரஸ் தரப்பில் விருப்பமில்லை என்று தெரிவிக்கப்பட்டதாம். மேலும் 3- வது அணிஅமைத்தப் போட்டியிடவே காங்கிரஸ் விரும்புதாகவும் கூறப்பட்டதாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற