சூசுகியின் பங்குகளை வாங்குகிறது டி.வி.எஸ்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

"சூசுகி மோட்டார்ஸ்" நிறுவனத்தின் 25.97 சதவீத பங்குகளை டி.வி.எஸ். நிறுவனம் வாங்க முடிவுசெய்துள்ளதையடுத்து, இந்த 2 நிறுவனங்களுக்கும் இடையில் இருந்த கூட்டு ஒப்பந்தம் முறிந்துவிட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் டூவீலர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த டி.வி.எஸ்-சூசுகிநிறுவனங்கள் இரண்டும் தனித்தனியே செயல்பட முடிவெடுத்துள்ளன.

இதுதொடர்பாக இன்று நடந்த வாரிய உறுப்பினர்கள் கூட்டதில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டி.வி.எஸ்.நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் வேணு சீனிவாசன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சூசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் 25.97 சதவீதப் பங்குகளை, ஒவ்வொன்றும் ரூ.15 என்ற விலையில் டி.வி.எஸ்.நிறுவனம் வாங்கிக்கொள்ளும்.

மேலும் டி.வி.எஸ். நிறுவனத்திற்கும், சூசுகி நிறுவனத்திற்கும் டூவீலர் உற்பத்தியில் இருந்துவந்த 15 ஆண்டுகாலகூட்டு ஒப்பந்தம் முடிவடைந்தது.

எங்கள் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த சூசுகி நிறுவனத்தின் கூட்டு ஒப்பந்தத்தையும், அதற்கானலைசென்சையும் ரத்துசெய்வது என்று வாரியக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது என்றார் வேணு சீனிவாசன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற