மதுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை 1971ம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

1991ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மதுரை மாநகரின் மொத்த மக்கள் தொகை 9.51 லட்சமாக இருந்தது. இப்போது இது பலமடங்காகிவிட்டது. மதுரை மாநகராட்சியின் பரப்பளவு 51.85 சதுர கிலோமீட்டர். மொத்தம் 72 வார்டுகள் இங்கு உள்ளன.

மதுரை மாநகராட்சியின் வரலாறு:

1866: மதுரை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு. அப்போதைய மக்கள் தொகை 41,601. நகரின் பரப்பளவு 2.60 சதுர கிலோமீட்டர்.

1882: நகராட்சியில் புதிதாக கமிஷனர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. முதலாவது கமிஷனர் அதே ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி பதவியேற்றார்.

1885: கமிஷனர் பதவி கவுன்சிலர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டனர். கமிஷனர்களின் தலைவர் பதவி பிரசிடென்ட்என்ற பெயரிலிருந்து சேர்மன் என்று மாற்றப்பட்டது. முதலாவது சேர்மனாக ராவ் பகதூர் ராமசுப்பய்யர் என்பவர் பதவியேற்றார்.

1892: கவுன்சிலர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் 6 பேரை அரசே நியமிக்கும்.

1921: கவுன்சிலர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது.

1931: அரசியல் காரணங்களுக்காக நகராட்சி கவுன்சில் கலைக்கப்பட்டது. மாவட்ட உதவி கலெக்டர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

1933: மீண்டும் அதே கவுன்சில் செயல்பட அரசு அனுமதித்தது.

1942: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரித்ததற்காக கவுன்சில் மீண்டும் கலைக்கப்பட்டது.

1943: கவுன்சில் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவரையும் அரசே நியமிக்கும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.

1948: சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக கவுன்சிலுக்குத் தேர்தல் நடந்தது. ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் இந்த தேர்ந்தெடுக்கப்பட் நகராட்சிசெயல்படத் துவங்கியது. கவுன்சிலர்கள் அனைவரும் 1969 வரை செயல்பட்டனர்.

1969: நகராட்சிக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 48 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள், மூன்று பேர் தாழ்த்தப்பட்டபிரிவைச் சேர்ந்தவர்கள்.

1971: மதுரை நகராட்சி, மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி கவுன்சிலர்களாக செயல்படஅனுமதிக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டார். பி.ஆனந்தம் துணை மேயராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

1974: மேலும் 13 பஞ்சாயத்துக்கள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. நகரிலுள்ள வார்டுகள் 65 ஆக மாற்றம் செய்யப்பட்டன.

1978: மாநகராட்சிக்கு முதல் முறையாக தேர்தல் நடந்தது. 65 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 4 பேர்தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

1991: வார்டு சீரமைப்பு கமிட்டியின் பரிந்துரைகளின்படி மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக மாற்றப்பட்டது.

1996: மதுரை மாநகராட்சிக்கு இரண்டாவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக திமுகவைச் சேர்ந்த ப.குழந்தைவேலு தேர்ந்தெடுக்கப்பட்டார்.துணை மேயராக மிசா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். புதிய உறுப்பினர்கள் 25.10.1996 அன்று பதவியேற்றுக் கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற