தமிழகத்தில் மழை தொடர்கிறது - இதுவரை 6 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்:

தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதுவரை இந்த மழைக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரிய கோட்டுமுளை கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் (21),சாக்கங்குடி முருகானந்தம் (21) ஆகிய 2 பேரும் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பெய்த பலத்த மழை காரணமாக, மின்சாரக் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்த மின்சாரக்கம்பியில் மாட்டிக் கொண்டு 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதனின் மனைவி லட்சுமி (50) இடி தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார்.

அதேபோல், ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடியைச் சேர்ந்த பெரிய பாப்பா என்ற ராஜேஸ்வரியும், பலத்தசத்தத்துடன் இடி விழுந்த அதிர்ச்சியில், அதே இடத்தில் இறந்து போனார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியிலும், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.மாம்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியனின் மனைவி செல்வி (35) மற்றும் சேகரின் மகன் அரிதாஸ் (11) ஆகியோர்மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி தாக்கியதில் இறந்து போனார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற