திமுக-எம்ஜிஆர் அதிமுக இடையே தொகுதி உடன்பாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கும் எம்.ஜி.ஆர்.அ.தி.மு.கவுக்கும் இடையே தொகுதி உடன்பாடுஎட்டப்பட்டிருப்பதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) திமுக அறிவித்துள்ளது.

அடுத்தமாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

அரசியில் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. பல கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.

நாளை (திங்கள்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். இந்நிலையில் திமுகவுக்கும் எம்.ஜி.ஆர்.அ.தி.மு.கவுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளாதாக திமுக அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:

திமுக-எம்ஜிஆர் அதிமுக இடை ய உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி எம்ஜிஆர்அதிமுகவுக்கு இரண்டு நகராட்சி தொகுதிகளும், 10 டவுன் பஞ்சாயத்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எம்ஜிஆர் அதிமுக புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் நகராட்சி தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

திமுக ஏற்கனவே பாமக, பாஜக, எம்ஜிஆர் கழகம் மற்றும் அனைத்திந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம்ஆகியவற்றுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து அவர்களுக்கான தொகுதிகளும்ஒதுக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை வந்தவாசி தொகுதிக்கும், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கான வேட்பாளர்பெயர்களையும் ஞாயிற்றுக்கிழமை திமுக அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற