தேர்தலில் மீண்டும் ஜாதிக் கட்சிகள்: தேறுமா இந்தத் தேர்தலில்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் ஜாதிக் கட்சிகள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. இந்தத் தேர்தலின் மூலம்அவை தங்களை மக்கள் மத்தியில் நிலைநாட்டிக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஜாதிக்கட்சிகள்இடம்பெற்றிருந்தன.

புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய நீதிக்கட்சி, மக்கள் தமிழ் தேசம், கொங்கு நாடு மக்கள் கட்சிஉள்ளிட்ட ஜாதிக்கட்சிகள் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றன.

இந்தக் கட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து கூட்டணியில் இருந்து 29 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அவற்றில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் திருமாவளவன் மட்டும் வெற்றிபெற்றார். மற்றவர்கள் படுதோல்விஅடைந்தனர்.

இதன் மூலம் அப்பட்டமாகப் ஜாதிச்சாயம் பூசிக்கொண்டு வரும் கட்சிகளை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பதுநிருபணமாகியுள்ளது.

மேலும் இது போன்ற ஜாதிக் கட்சிகளைச் சேர்த்ததும் திமுகவின் தோல்விக்கு ஒரு காரணம் என்று அப்போதுசொல்லப்பட்டது.

ஆரம்பத்தில் இதை திமுக மறுத்த வந்தது. ஆனால் இந்த முறை அவர்களை அழைக்க திமுகவுக்கு விருப்பம் இல்லை.

இதனால் அரசியல் களத்தில் தங்களைத் தக்கவைக்க விரும்பிய ஜாதிக்கட்சிகள், காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை தலைமையில் 3- வது அணி ஆரம்பித்தவுடன், அதில் சென்று சங்கமமாகி உள்ளன.

இந்த அணியில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 3 மாநகராட்சிகளை ஜாதிக்கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளதுகாங்கிரஸ்.

இந்த 3 மாநகராட்சிகளிலும், அதிமுக மற்றும திமுக கூட்டணி கட்சியின் வெற்றிகளை மாற்றியமைக்க மட்டும்தான்ஜாதிக்கட்சிகளால் முஐயும் என்று சொல்லப்படுகிறது.

இந்த முறையும் இதுபோன்ற ஜாதிக் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் அங்கீரகாரம் கிடைக்க சாத்தியம் இல்லை என்றேசொல்லப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற