பெங்களூரில் இருந்து தேனிக்கு மது, கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி:

பெங்களூரிலிருந்து தேனிக்கு மதுபாட்டில்கள் மற்றும கஞ்சா ஆகியவற்றைக் கடத்தி வந்த தேனியைச் சேர்ந்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனியில் நேற்று போலீசார் பல இடங்களில் நடத்திய திடீர் சோதனையில் 200 மதுபாட்டில்களும், 20 கிலோகஞ்சாவும் பிடிபட்டது. இது தொடர்பாக 4 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் விசாரித்ததில், இவற்றை பெங்களூரிலிருந்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நாலவரையும் போலீசார் கைது செய்து அவர்களின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற