கூட்டணி முறிவுக்கு அதிமுகதான் காரணம்: மார்க்சிஸ்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததற்கு அதிமுகவின் அணுகுமுறைதான் காரணம் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி.

ஆனால் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே தொகுதி உடன்பாடுஏற்படாத காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில், சென்னையில் இக்கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இந்த கூட்டம் பி.சம்பத் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் சங்கரய்யா மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில்சம்பத் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தைநடத்திவந்தது. நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

அதிமுக தலைமை தொகுதி உடன்பாடு ஏற்படுவதற்கான சரியான அணுகுமுறையை பின்பற்றவில்லை, இதனால்எங்கள் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்தது. இந்த முடிவைகட்சியின் மாநிலக்குழு அங்கீகரிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார் சம்பத்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற