பிரான்ஸ், இங்கிலாந்து கடும் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீரில் சட்டசபை மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலை பிரான்சும் இங்கிலாந்தும் கடுமையாகக் கண்டித்துள்ளன.

இந்திய ஜனநாயகத்தைக் குறி வைத்துத் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பிரான்ஸ் கூறியுள்ளது.

பிரஞ்சு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பிரான்காய்ஸ் ரிவாசியூ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல்ஜனநாயகத்தை குலைக்கும் முயற்சியாகும். இதை பிரான்ஸ் கடுமையாகக் கண்டிக்கிறது. தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடாஇந்தியாவின் முயற்சிகளுக்கு பிரான்ஸ் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து:

இத் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் வாஜ்பாயை புதன்கிழமைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிளேர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

பிளேர் சில தினங்களில் பாகிஸ்தான் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற