காஷ்மீர் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போரிவோம்- அமெரிக்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் அமெரிக்க போராடும் என அந் நாட்டுவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறினார்.

காஷ்மீரில் நடந்து வரும் தீவிரவாதத்தை இதுவரை அமெரிக்கா கண்டுகொண்டதே இல்லை. அங்கு பாகிஸ்தான் மற்றும்ஆப்கானிஸ்தான் அரசுகளின் உதவியுடன் பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறி பாகிஸ்தான் ஆயுதங்கள், பணம் கொடுத்து ஆதரித்து வருகிறது.இவர்களுக்கு ஆப்கானிஸ்தானும் ஆதரவளிக்கிறது.

இது தொடர்பாக இந்தியா பல முறை பல சர்வதேசக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லியும் அதை அமெரிக்காகண்டுகொண்டதில்லை. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் அதிருப்தியாளர்கள் (ரெபல்ஸ்) வன்முறையில்ஈடுபடுவதாகத் தான் கூறி வந்தது.

இந் நிலையில் அமெரிக்காவையே தாக்கி அவர்களை கதிகலங்கச் செய்துள்ளனர் தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளின்தலைவனான பின்லேடன் தான் பல காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் குரு.

பின்லேடனைத் தாக்க அமெரிக்காவுக்கு உதவத் தயாராக உள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் அதற்குப் பதிலாக காஷ்மீரில் நடந்துவரும் தீவிரவாதத்தைக் கண்டுகொள்ளக் கூடாது என அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் தான் நியூயார்க்கில் நடந்த தாக்குதலுக்குப் பின் உலகம் முழுவதும் பல தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்வதாகஅறிவித்த அமெரிக்கா காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளை தடை செய்யாமல் விட்டுவிட்டது.

இதை இந்தியா மறைமுகமாக கண்டித்து வருகிறது. அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய இந்திய பாதுகாப்புஆலோசகர் இந்த விஷய்ததில் இந்தியாவின் வருத்தத்தைத் தெரிவித்தார்.

இந் நிலையில் தான் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் படுகொலையாயினர்.

இதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகரை சந்தித்துப் பேசினார்.அப்போது தான் அமெரிக்க அதிபரும் திடீரென வந்து ஜஸ்வந்த் சிங்கை சந்தித்தார்.

தொடர்ந்து ஜஸ்வந்த் சிங் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாவல், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றார்.

இது அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற