கடத்தல் நாடகம்: ஒருவர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை:

டெல்லி-மும்பை விமானக் கடத்தல் புரளி தொடர்பாக ஒரு பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மும்மை காவல்துறை ஆணையாளர் என்.கே.சிங் கூறுகையில்,

ஷர்மா என்பவர் கமாண்டோக்களால் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அதேவிமானத்தில் தான் பயணம் செய்துள்ளார். இவர் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானிகளின் அறையில் நுழையமுயன்றிருக்கிறார். இவரைத் தடுத்த விமானப் பணியாளர்களிடம் தான் ஒரு விமானத்துறை அதிகாரி என்று கூறியுள்ளார்.

இதையடுத்துத் தான் குழப்பமே ஆரம்பித்துள்ளது. இவரை தீவிரவாதி என்று நினைத்த பைலட்கள் காக்பிட் கதவை மூடிக்கொண்டனர். மேலும் விமானம் கடத்தப்பட்டதை தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை ஒலியையும்எழுப்பினர்.

அகமதாபாத் மீது பறந்து கொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து வந்த எச்சரிக்கை ஒலி அகமதாபாத் விமானக் கட்டுப்பாட்டுஅறையில் பதிவானது. உடனடியாக விமானம் கடத்தப்பட்டதாக அகமதாபாத் கட்டுப்பாட்டு அறையினர் டெல்லிக்கு தகவல்கொடுத்தனர்.

டெல்லியில் விமானத்துக்குள் நுழைந்த கமாண்டோக்கள் அவரைக் கைது செய்தனர் என்றார்.

இது தான் உண்மையில் நடந்தது என்றார்.

ஆனால், சம்பவம் குறித்து மத்திய அரசிடமிருந்து முழுமையான விளக்கம் ஏதும் இதுவரை வரவில்லை.

முன்னதாக அகமதாபாத் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானம் கடத்தப்பட்டதாக தொலைபேசியில் மர்ம நபர் தகவல்கொடுத்ததால் தான் புரளி கிளம்பியதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன் கூறினார்.

இப்போது மும்பை காவல்துறை ஆணையர் புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற